கழையாம் கண்விழியாம்
பார்த்தலே மயக்கும்
கயல் விழியாம்
குழலாம் கார்குழலாம்
பூவாய் மணக்கும்
கற்றை கூந்தலாம்
சிலையாம் மெல்லிடையாம்
சிக்க வைக்கும்
சின்ன இடையாம்
நகையாம் புன்னகையாம்
சிரித்தால் பொழியும்
இசை மழையாம்
நிலாவாம் முகநிலாவாம்
பொழிவு மங்காத
வெண் நிலவாம்
நடையாம் இளநடையாம்
இளைஞரை ஈர்க்கும்
நன் னடையாம்-
இரவில்
கோயில் நடையை
திறந்தே வையுங்கள்
அந்நேரத்திலும்
புலம்ப ஆள் வருவார்கள்-
அதட்டுதல்
பெண்ணுக்கே
உரித்தான தாயின் குணம்
அது குழந்தைக்கு மட்டுமல்ல
அவள் அன்பு செல்லுத்தும்
அனைவருக்கும் பொருந்தும்-
உன்னை போல்
உன் நினைவுகளும்
பிடிவாதம் பிடிக்கிறது
நீ பிரிந்து சென்ற பின்னும்
என்னை விட்டு செல்லாமல் இருக்கிறது.-
உன் ஜாதி என்ன?
தாழ்த்தப்பட்டவன் என்றேன்
உடனே
ஒரு முத்தத்தை கொடுத்து
தாழ்த்திவிட்டாள்
ஜாதியை-
கற்றை முடியால்
கண்ணிரண்டை கட்டிப்போட்டாள்
புன்னகை செய்து
காதில் தேனுமிட்டாள்
கண்ணிரண்டை அசைத்து
ஏதோ திட்டமிட்டாள்
கன்னக்குழியில்
என்னை புதைதேவிட்டாள்
அழகாய்
என் மனதை
அபகரித்துவிட்டால்-
வாழ்க்கையை அர்த்தம் இன்றி
வாழ்ந்து பழகியவள்
அவன் பேச்சு தரும்
அர்த்தத்தில் முழுமை அடைகிறேன்-
பெரிதாய் ஒன்றுமில்லை
அவன் உலகத்தில்
சிறிதாய்
ஒரு இடம்
வேண்டும் எனக்கு
அவ்வளவு தான்.-
இந்த அளவுக்கு
உன்னை பிடிக்க
நான் சொல்லும் காரணம்
உனக்கு மிகவும்
அற்பமான காரணமாக தெரியலாம்
உண்மையில் அந்த
அற்பமான காரணம் போதும்
பிடிப்பதற்கு ...!-