வெளிநாட்டுக்கு ஆட்கள் தேவை..!
எல்லோருக்கும் இந்தியர்கள் தேவை...
இந்தியர்களுக்கு இந்தி தேவை...
தமிழர்கள் நாங்கள்
தனித்தே நிற்கிறோம்
சாதி மதமென்னும் தேவையில்....!-
எப்போதும் வரும் கண்ணீர்
இப்பொழுது வரும் காலதாமதத்தால் புனிதமாகிடுமோ....
நான் உடைந்த நேரங்களில்
என் உற்ற துணை நீ தானே....
எல்லாம் முடிந்தது என என்னும் போது
என்னுள் தொடக்கம் நீ தானே...
ஏதும் தெரியாதவன்....
ஒன்றும் புரியாதவன்....
யாதும் அறியாதவனாகினும்...
எல்லாம் அறிந்த சூனியவானே
நானாகினும்
என்னை புரிந்து கொண்டது நீ மட்டும் தானே...
எதுவாயினும் நீயும் என்னை பிரிந்திடாதே...
- என் கண்ணீரே-
வலி தரவே
விதிகள் பிறந்ததோ...!
பிரிவின் சதி தேடி திக்குமுக்காடயில
சண்டாளன் நானே சதிகாரன் ஆனேனோ....!
-
நான் வாடிய போதெல்லாம்
என்னை தேடிய உன் அன்பு
என்னை தேற்றியது
ஓய்வு எடுக்கும் உன்னிடமே
நான் ஓடி ஓடி உழைக்க கற்றுக் கொண்டேன்
உயிராய் உன்னை நினைத்தேன்
நீ காட்டிய உறவுகளை நானும் நேசித்தேன்....
என் திரையாம் நீ கிழிந்திட
மாயையை அன்பு என்னையும்
மாய்த்திட துடிக்குதே.....!-
கோடை வெயில்
கொழுத்திய போதும்
தாகமில்லை எனக்கு ...,
என் தாகம் தீர்க்கும் அவளின்
நினைவுகள் என்னுள் சுரப்பதால்....!-
நித்தம் என்னை மோதும் தென்றலே
சத்தமில்லாமல் நீ பதிவு செய்யும் முத்தங்களால்
பித்தம் கொண்டு அலைகிறேன்....
பித்தங்கள் அதிகரிக்கையில்
யுத்தங்களை தொடங்குகிறது என்னுள்
ஆக்ஸிடோசின்கள் ...
தென்றலே.....,
ஆக்ஸிடோசின் வெற்றி அணிவகுப்பில்
இந்த கல்லூளி மங்கனும் உன் காதலனாக..!-
இடை நெளிந்து வளைந்த
கட்டழகு தேருடல் அவளின்
ஆடை கலைக்க
அவன் வைத்த பெயர்
இலையுதிர் காலமோ...!-
கத்திரி வெயிலில்
அத்தி மரம் வேரில்
காதல் பூத்ததாக கண்டேன்
சிறகடிக்கும் சிட்டு ரெண்டு
துப்பட்டாவில் சிறைக் கொள்ள கண்டேன்....
துப்பற்ற இவனுக்கோ
விளங்காது போனது துப்பட்டாவின் துப்பு ...!
கண்களில் பரிமாறிய காதல்
கரையேறி போனது...
காற்றில் தூது போன காதல்
காற்றோடு தூர்ந்து போனது...
காத்திருந்த பார்த்த காதல்
பாதை மாறி போனது...
சேராத காதலோடு
தீராது வாழும் காதலுக்கும் காதலர்களுக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்...!-
நாட்காட்டியை எல்லா திசைகளிலும்
சுழற்றி விட்டேன்....
அவளோடு கடந்த அந்த நாட்களை திரும்ப பெற.......
எஞ்சியது ஏமாற்றம்
எதிரே கடிகாரம்
காயங்களுடன்......
கோபங்கள் தனிய தோழர்கள் ஆகிணோம்...
இருக்கும் நினைவுகளை ஏந்தி
இல்லாத காதலியை தேட ஓடினோம்...
வழக்கம் மாறாது அவன் வட்டத்திற்கு உள்ளே
நான் வட்டத்திற்கு வெளியே....!-
கருப்பு வைரம் ஒன்று
களவு போனது....
அள்ளி அள்ளி தந்த கைகள்
ஆண்டவன் அழைக்க சென்றது....
நல்லாட்சி தலைவனை எதிர்பார்த்த அரசியலும்
ஏமாந்து போய் நின்றது....
பலர் பசி போக்கிய வயிறு
இனி பசிக்காமலே போனது....
கலங்கி நிற்க்கும் மக்கள் மனம் வென்று...
காலம் போற்றும் சகாப்தமாய்
சரித்திர நாயகன்
அன்பை விதைத்து கடந்து போகிறான்....🙏🏻-