அவள்....
நகமெருகுகளின் நிறத்திற்கு
மெணக்கெடும் மாதரிடையில்
மருதாணியின் மணத்திற்கு ஏங்குபவள்....
மின்னூல்கள் தவிர்த்து
தடியட்டை புத்தகத்தில் முகம் தொலைப்பவள்...
காதொலிப்பான்கள் புறக்கணித்து
பாட்டியின் மடியில் கதைகேட்டு
துயில்பவள்...
அறுதியாய்
செயற்கை மழைக்கு
வித்திட்ட இரசாயனத் தூவலின் ஊடே
பொழிய மறுத்த மேகம் அவள்...
-
Dear Madurai,
You may be a city of 142 sq.km,but the Masi street of West bears lot memories in me.Am not an typical Maduraian to roam in the streets that are active even during nights,but still the feel that I stay in the heart of the city had made me feel so imperialist. But the fact that I no more reside there makes me tremble with tears.Madurai,I miss you more than my family and my people over there.
Yours Truely,
Maduraivasi.-
எப்படி சொல்வேனடி....
என்னை பார்த்துக்கொண்டே
மாடியில் துவைத்த உடையை உலர்த்துகிறாய்...
சிக்கிக்கொள்வது என்னவோ
நீ இடும்
பிடிப்பு ஊக்கியில்
துணியும் நினது விழி நோக்கினில்
என் இதயமும்...
ஸ்ரீ
-
எப்படி சொல்வேனடி....
உடல் நலிவுற்ற பொழுதில்
மருந்துகள் ஏதும்
பலனளிக்கா நிலையில்
உயிர் மீட்கிறது
அன்பின் அழுத்தம் நிறைந்த
நினது ஒற்றை முத்தம்....-
எப்படி சொல்வேனடி...
பல்படிவங்காட்டியைக் கண்டதும்
விரைவாக அழகழகாக மாறும்
உருவங்கள் உன்னை ஈர்க்கவில்லையா
என கேட்பவளிடம் எப்படி சொல்வேன்...
நொடிக்கு நூறு முகபாவங்கள் காட்டும்
உன்னை விட வேறு எது என்னை பரவசப்படுத்தி விடுமென்று...
-
எப்படி சொல்வேனடி....
எத்திசை திரிந்தாலும்
வடதிசை அமரும்
தேவவாக்கினைப்போல
நீ என்னென்ன செய்தாலும்
நான் எங்கெங்கு சென்றாலும்
உன்னை நோக்கியே திரும்புகிறது
என் காதல்....-
எப்படி சொல்வேனடி....
என் மீதான கோபம் கடத்த
நீர்க்குமிழிகளை உடைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறாய்
உன் கோபம் தணிக்க
காதல் நிறைத்து குமிழியாய்
மாறியது நானென்று அறியாமல்....-
எப்படி சொல்வேனடி...
திட்டமிடப்படா பயணத்தின்
சாலை வளைவாய்
அனிச்சையாய் மேலோங்குகிறது
உன் மீதான காதல்...-
எப்படி சொல்வேனடி....
மழைக்குபின் கிளையின் சாரலாய்
மென் முத்தமிட்டு என்னைஅலுவலகம்
அனுப்பியபின்
கட்செவியிலோ குறுஞ்செய்தியிலோ
நீ எனக்கு அனுப்பும்
மின்முத்தங்கள்....-
எப்படி சொல்வேனடி......
கடற்கரையில் விளையாடும் பொழுது
அலை நீரை வாரி தெளிக்கையில்
சேர்ந்தே வரும் கரை மணல் போல்
கோபம் கொண்டு நீ கத்துகையிலும்
ஊடே வருகிறது உன் காதல்...
-