என்ன கவிதை கூறிட முடியும்
உன் கால் அழகிற்கு...
என் இதழ் பதித்து மனதார
மன்னிப்புக் கேட்கிறேன்.,
உன் மெட்டியால் சத்தமிட்டு
என்னைக் கொஞ்சம் மன்னித்து எழுப்பிவிடு!-
Insta Id:- @ippadiku_anbizha
உன்னால் முடியாதென்றேதான் இந்த உலகே கூறிடும்
அதைய... read more
கெவின் கிருஷ்ணனாகவும்
ரபியா ராதாவாகவும்
அவதாரம் எடுக்கிறார்கள்
பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி!-
இருந்துவிடு எனக் கதறுகிறேன்
செல் என்று சொல்லவில்லை
செல்லரிக்கும் தனிமை அளிக்காதென்கிறேன்
மறந்துவிடு என்று சொல்லவில்லை
மரணம் வரை தொடர்ந்திடு என்கிறேன்!
-
சாமியின் ரத ஊர்வலம் முதல்
சாமானியனின் இறுதி ஊர்வலம் வரை!
ஆன்மிகம் முதல் அறியாமை வரை!
இன்றே வாங்கிப் படியுங்கள்
தஞ்சாவூர் எழுதிய களி(ரி)மேடு!...💔-
கொஞ்சம் வெயிலில் காய்ந்தேன்
கொஞ்சம் நடைகள் நடந்தேன்
கொஞ்சம் விரலால் எழுதினேன்
கொஞ்சம் நேரங்கள் ஒதுக்கினேன்
கொஞ்சம் உனக்காய் வாழ்ந்தேன்
அவ்வளவு தான்... வேறு என்ன
பெரிதாய் செய்துவிட்டேன்?
என்ற பதிலைத் தவிர
உன்னிடம் சொல்ல
வேறு எதுவுமில்லை...
நீ என்னிடம் பரிசுப் பொருளின்
விலையை கேட்கும் போதெல்லாம்...
என்னை நம்பு
உண்மைக்கும் உனக்காக
நான் செலவழித்தது
அவ்வளவே தான்!...-
கண்ணு மூக்கு ஓகே
வாய் தான் சரியில்ல
என்றாள் அம்மா!
பதறினான் பையன்..
"பழக்க தோஷத்தில்
டூ வீலர் சோரூமை
மேட்ரிமோனி ஆக்கிட்டா
மன்னிச்சுருங்க!"
என்றார் அப்பா!...-
நமக்கு வேண்டாதவையெல்லாம்
அவர்களுக்கு வேண்டியவையாகிறது!...
~குப்பைத் தொட்டி-