விடிவதெப்போது...?!
-
விவசாயிகள்
விதைகளை மண்ணுக்குள்
விதைக்கட்டும்🖤
விவசாயம் அழியாது
என்ற நம்பிக்கையை
நாம் விவசாயிகளின்
மனதிற்குள் விதைப்போம்🖤
⬇️ ⬇️ ⬇️-
நகரம் எனும் நரகத்தை மறந்து
பனியில் நனைய ஆசை...
கவிகளில் காணும் பச்சை எல்லாம்
கண்களால் காண ஆசை...
பாதை தெரியா நேரங்களிலும்
பயணம் செல்ல ஆசை...
உண்டு தீர்த்தது போதும் இனிமேல்
உழுது பார்க்க ஆசை...
-
ஏர் தழுவிட பயின்றவனுக்கு
ஏழ்மையை பயிற்றுவித்தது
நியாயமோ???-
விதை விதைத்து
அறுவடை பண்ணியவன்
இன்னும்
களத்து மேட்டுல
தான் படுத்து உறங்குகிறான்
நடுவுல அதை வாங்கும்
இடை தரகர்
வீட்டு நாய் கூட
ஏசி கார்ல போகுது-
பாராளுமன்றம்
தோற்றது
என்
ஏர்ராளுமன்றத்திடம்
வென்றது
வேளாண் புரட்சி... 💪💪-
வருங்காலத்திற்கான
உணவினை
எடுத்துச்செல்கிறார்
இப்பெண்மணி
விவசாயம்
அழிந்ததை
நினைத்து
வேதனை
கொ(க)ண்டு-
விதைப்பவன்
ஏக்கம்
வெடித்து இருக்கும்
வயலில்...
துளிர் விடும்
புல்லின் பசுமை
போன்று-