நிழல்தரு விருட்சமாய்
நகர முற்படும் வாழ்வுதனில்
முளையோடு கிள்ளி எடுக்கவும்
கிளைகளை உடைத்து எறியவும்
வேரோடு வெட்டி வீழ்த்தவும்
தண்டில் நெருப்பைக் கொட்டவும்
கூட இருந்தே
வேலை பார்க்கும் கூட்டத்தால்
வழி நெடுகிலும்
வலிகளின் குறுக்கீடு தான் !!!-
15 JUN 2021 AT 19:25
18 NOV 2019 AT 21:38
வலியில்லாமல் வாழ்க்கை இல்லை,
வலியை வலிமையாக்கி
வழியாக்கினால்
வாழ்க்கையும்
வசந்தமாகும்...!!-
18 JAN 2020 AT 15:09
மனதில்
நீ வந்த வழி
நினைவில்லை
ஆனால்
நீ சென்ற வழி(லி)
நினைவிலிருக்கு
எப்போதும்-
8 FEB 2019 AT 6:25
ஒப்புர ஒழுகு
உலகம் எவ்வழியோ
அதுவே உன் வழி
என் வழி தனி வழி
என்பது
திரைக்கு மட்டும்
பொருந்தும் வரி....
-
3 NOV 2022 AT 21:45
1)நிலவிற்கே
வழி காட்டுமா
செயற்கை வெளிச்சம்
2)செயற்கை வெளிச்சமும்
வழி காட்ட விரும்பு தாம்
நிலவிற்கு
இதில் எது ஹைக்கூ வகை
பதிலை கமெண்டில் சொல்லவும்-
4 OCT 2021 AT 18:08
மஞ்சள் சிவப்பாக மாறும்
ஐந்து நொடித் துளிகளுக்குள்
ஊசலாடுகிறது உரிமையே அற்ற
உன்னத வாழ்வுகளும் சேர்த்து
-
10 MAY 2021 AT 6:49
அழுக்கு பட்ட இடங்களின்
கறை நீக்க
எவ்வளவோ வழிகள்....
ஒரு சிலரின் மன அழுக்கை
போக்கும் வழி தான்
தெரியவில்லை..-