எத்தனை கவிதைகள்
எத்தனை கதைகள்
பெரும்பாலும் அத்தனை படைப்புகளுக்கும்
பெற்றவர்
'வலி'
தானோ?
-
2 AUG 2020 AT 11:19
22 NOV 2019 AT 15:33
உன்
படுக்கையறையில்
பாதியிடம்
கேட்கவில்லை
என் மனவறையில்
உனக்கு மட்டும் தான்
இடமிருக்கிறது
என்கிறேன்!!!-
30 MAR 2021 AT 21:56
பேரன்பின் நிழலில் பூட்டி
வைக்குமிந்த அடிமை
உத்தியோகம் சலித்து
விட்டதெனக்கு...
பெருந்துயரின் தகிப்பில் தள்ளி
விட்டு ஒழிந்து போவென்ற
சாபம் போதுமெனக்கு...!-
29 JUL 2020 AT 22:06
விழிகள் சிந்தும்
கண்ணீரை
துடைக்க நீளும்
கரங்கள்
இதயம் சிந்தும்
உதிரத்தை
கண்டும் காணாமல்
செல்கிறது...-
27 JUN 2020 AT 0:01
இன்றே கொட்டித் தீர்த்து விடு
ஏனென்றால்
நூறு வருடங்கள் கழித்து
இன்னொருத்தி
தன் கண்ணீரை உலர வைக்கும் போதெல்லாம் வியப்படையலாம்
வரலாற்றில்
எங்கே தன் குரலை இழந்தாளென்று-
29 JUL 2020 AT 21:59
நீ நிராகரித்த
இவளது ஆசைகள்
மீண்டும்
தலை தூக்காமலிருக்க
குழி தோண்டி
புதைத்து புதைத்து
இவள் இதயம்
கல்லறையானது...-
29 JUL 2020 AT 22:03
எதையெல்லாமோ
விட்டுக்கொடுத்தார்கள்
சில நல்லவர்கள் 😕
அவர்களுக்காக
உன்னையே
விட்டுக்கொடுத்ததை
அறியாதவர்கள்...-