QUOTES ON #வண்ணத்துப்பூச்சி

#வண்ணத்துப்பூச்சி quotes

Trending | Latest
20 MAY 2020 AT 19:22

உன்னை தொட்டு
என் தாகம்
தீர்க்கிறேன்!
என் இறகுகள்
தொட்டு உன்
இதழ்களைப்
புதுப்பித்துக்
கொள்!

-



வண்ணத்துப்பூச்சிக்களுக்கும்
கொள்ளை ஆசைகள்
தேவதையின் உடையில்
வலம் வந்திட

-



வண்ணத்துப்பூச்சி

மீதான உங்கள்

காதல் அதனை

கையில் தொடாது

வண்ணத்தை

கலைக்காத வரை

அழகானதே !

-



இனிமையாய் விரிகிறது
சட்டென்று வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
வரவில் நாணம்
கொண்ட மலரொன்று

-



வாடிய மலருக்கு
வண்ணத்துடன் கூடிய
உயிர் கொடுக்கிறதாம்
வண்ணத்துப்பூச்சி

-



இதழ்களை விரிக்காத பூக்களிடம்
ஏன் மல்லுக்கு நிற்கிறாய்
வண்ணத்துப்பூச்சியே..❤️

-



நான் வந்த வழியெங்கும்
சாலைகளாகவே தெரிகிறது
முன்பொரு நாளில் இங்கு பூக்களின்
நந்தவனங்கள் இருந்தது யாரேனும்
அறிவீர்களா என்று கேள்வி
கேட்டு கொண்டு பறக்கிறது
கண்ணீர் துளிகளுடன்
உணவினை தேடி
வண்ணத்துப்பூச்சி

-


6 JUL 2020 AT 6:55

உனக்கான காத்திருப்பின்
வலியை சற்றே குறைத்து விட்டு செல்கிறது ஒரு வண்ணத்துப்பூச்சி....!

-


20 MAY 2020 AT 10:05

என் கண்ணை
போலே துடிக்கிறாய்
விண்ணில் மண்ணில்
பறக்கிறாய்
பொன்னின் நிறமாய்
மிளிர்கிறாய்
உன்னை போலே பறக்க
உள்ளம் கொண்டேன் வா !

-


10 JAN 2018 AT 10:44

விடிவதற்குள் ஒருமுறையாவது
நிலவின் முகம் பார்க்க ஏங்கும் சூரியன்.

சூரியன் மீது மையல் கொண்டு
ஆவலுடன் காத்திருக்கும் சூரியகாந்தி.

அதன் மஞ்சள் இதழ்களில் தேன் குடிக்க
சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சி.

இவைகளுடன் நான்.
இது ஒரு குளிர்கால காதல் கதை.

-இந்துமதி

-