QUOTES ON #புதுக்கவிதை

#புதுக்கவிதை quotes

Trending | Latest
6 NOV 2019 AT 20:18

விழி மூடும் போதெலாம்
பூக்கிறாள் இமைக்குள்ளே
பலவண்ணப் பூக்களாய்

-


1 JUL 2022 AT 3:17

மலர்கள் மலர்ந்தது
மகரந்த சுகந்தம் கமழ்ந்தது
மனம் லயித்து மகிழ்ந்தது.
தாயின் கைகளில் தவழும்
பச்சிளங் குழந்தை போல்
பிறந்த புதுக்கவிதை ஒன்று
காகிதத் தூளியில்
கண் சிமிட்டி சிரிக்குது!

-


1 JUL 2019 AT 19:54

என்னுள் நடக்கும்
யுத்தச் சிந்தையில்
சத்தமின்றி பூத்தாள்
புதுகவியாய்
முடிவில்லா முற்றுப்
புள்ளியைத் தேடி

-


16 JUN 2020 AT 11:50

காதல் செய்ய
முடியாத போது
கொஞ்சம் கலவரம்
செய்யத் தானே
ஆரம்பித்திருக்கிறேன்!
புதுக்கவிதை!

-





























-


5 NOV 2019 AT 17:07

பொய்யோ மெய்யோ
புன்னகையும்
பொய் கோபமும்
காதலில் என்றுமே
அழகுதான்!!!

-


8 DEC 2017 AT 16:10

மரபுக்கவிதை மௌனமாய்
மொழியின் மாா்தட்டிக்
கொண்டிருக்க,

புதுக்கவிதை
புரியும் விதமாய்
புதுவிதமாய் அலங்கரித்து
கொண்டிருக்கிறது..,

-


30 JUN 2020 AT 19:17

எழுத்துகள் சிதறி விழுந்தன
நீ படிக்கவில்லை
என்ற வருத்தத்தில்,
சீராக்க செய்வதறியாது
தவித்து போனேன்
ஆனால், உன் நினைவுகள்
வருவதை கண்டு
எழுத்துகள் எல்லாம் ஒன்றிணைந்து
பொருளுள்ள புதுக்கவிதையானது ..

-



புன்னகை பேசும் மொழியிலே
நீயே புதுக்கவிதை ஆகிறாய்..!
என் கவிதை பேசும் பொய்யிலே
நீயே மெய்யாய் தோன்றுகிறாய்..!

-


14 JUL 2019 AT 16:59

உன்னோடு நானும்
பேசத்தான்
புதுக்கவிதை ஒன்றை
வடிக்கின்றேன் அதில்
கவியாய் படைத்த
பொய்கள் எல்லாம்
மெய்யாய் நீயும் ஆனதென்ன ?

-