பயணங்கள்
👇👇-
தவழ்ந்து வந்த உருவத்திற்கு
முகம் ஏதும் இல்லை போர்வைக்கு
வெளியே. சில அறைகளைக்
கூட்டி விட்டு கை ஏந்திய போது
துளிர்த்த ஈரம்,ஊசி விற்றுக்
கொண்டிருந்த மழலையிடம்
தோன்றவில்லை.இறங்கும் போது
தவழ்ந்த உருவத்தின் ஓட்டத்தோடு
தலை தெறிக்க ஓடியது
பெரும்பாலான,சிறுபான்மை
கணிப்புகள்.வாங்கப்படாத
ஒற்றை ஊசி குத்திக்
கொண்டே இருந்தது.
-
மௌனமாய் பல உரையாடல்கள்
முடிவில்லா பயணங்கள்
முடிவுற்ற சண்டைகள்
விரல் கோர்த்த கைகள்
விட்டுக் கொடுக்கா பண்புகள்
உன்னிடத்தில் வேண்டுகிறேன்
உயிரே!-
பயணங்கள் பலவிதம்:
ரசனைகளை மேலோங்க செய்கிறது
தேடலை ருசிக்க செய்கிறது
மனதினை இலகுவாக்குகிறது
எண்ணங்கள் மாற்றம் காண்கிறது
புதுபுது அனுபவங்கள் சேகரிக்கப்படுகிறது
-
செல்லும் வழியெங்கும்...
அன்பின் கால்தடங்களை
ஆழப்பதித்து செல்!
பின்தொடர்பவர் பயணங்கள்
இனிமையாக தொடர...!-
நீ இல்லாமல்
நெடும் பயணம்
செய்ய நேர்ந்தால்
உன் நினைவுகளை
மடித்து அடுக்கி
வைத்த பிறகே
துவக்குகிறேன் என்
ஆயத்தங்களை !!-
எங்களின் மனங்களில் மலர்ந்திருக்கும் உங்கள் கவிதைகளின் பயணம் முடிவின்றி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🍫
-
என்னை
சிரிக்க வைத்தோ..
அழ வைத்தோ..
கடுப்பேற்றியோ..
வெறுப்பேற்றியோ...
கள்வா!
உன்னுடனான...
காதல் பயணங்களை
இனிக்க வைக்கிறாய்!-
என்றுமே
யாருக்காகவும்
விட்டுக்
கொடுக்காதே
ஒரு இடம்!
பயணத்தில்
ஜன்னலோரம்!-