நான் நல்லவன்
என்றான்
நம்பிக்கை வரவில்லை
உலகிலேயே
நான் தான்
மிகவும் கெட்டவன்
என்றான்...
அவனைத் தவிர
வேறு யாரையும்
நம்பத் தோன்றவில்லை...-
படித்ததில் பிடித்தது !
உண்மையைச் சொல்பவனை
உலகம் வெறுக்குமடா !
உதவிட நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா !
உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவனென்று என்னை
நடுவில் வைத்துப் போற்றுமடா!-
நல்லவனா
இருக்கறத்துக்குதான்
நிறைய
மெனக்கெடல்கள் தேவை!
கெட்டவனா இருக்க
இயல்பே போதுமானது..!!-
நீ நீயாக இருக்கும்
உன் அயோக்கியத்தனத்தை
கூட பிடித்து விடுகிறது..!
நீ நீயாக இல்லாத
உன் நல்லவனென்ற
வேஷத்தைத் தான்
அறவே பிடிக்க வில்லை..!
#சுயம்விரும்பி-
யாரையும் விடுவதில்லை
நல்லவன் எனும் பட்டம்
ஆனால் வெகு சிலருக்கே
அது கிடைக்க பெறுகிறது-
வழிந்தோடும்
வாக்குவாதமதை
வர்ணனைகளில் குழைத்து
வசைப்பாடும் என்
வதனத்தை
வாஞ்சையாய்
வர்ணிக்கும்
வல்லவனும்
என் நல்லவனே
#என்னவன்
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
நல்லவர் கெட்டவர் என யாரும் இல்லை இவ்வுலகில்..
பல நன்மைகள் செய்த ஒருவர்
ஏதோ ஒரு தீமை செய்து கெட்டவர் என்ற பேர் வாங்கி விடுகிறார்...
பல தீமைகள் செய்த ஒருவர்
ஏதோ ஒரு நன்மை செய்து நல்லவர் என்ற பேர் வாங்கி விடுகிறார்...
-
சில சமயம்
நல்லவர்கள்
தோற்றுத்தான்
போகிறார்கள்....!
அவ்வாறு
வேடமிடுபவர்களிடம்....!!
-
நல்லவனாக
வாழ
முடியவில்லை
என்றாலும்
பரவாயில்லை
கெட்டவன் என்று
பெயரை
கெடுத்து
கொள்ள
வேண்டாம்.-