"இவ்வளவு படித்திருக்கிறேன்!"
என்பது பெருமையல்ல,
"படித்ததால் இவ்வளவு
நற்பண்புகளை பெற்றிருக்கிறேன்!"
என பெருமைகொள்ளுங்கள்.-
சந்திரனின் வெளிச்சம்
சூரியனைச் சாரும்
சந்திரனின் குளிர்ச்சி
அதனைச் சாரும்
நற்பண்புகளின் மகிழ்ச்சி
ஆன்றோரைச் சாரும்
நன்மதிப்புகளின் தொடர்ச்சி
அவரவரைச் சாரும் ...-
ஒருவர் தானே இறங்கி வந்து
செய்த தவறுக்கோ செய்யாத
தவறுக்கோ மன்னிப்பு கேட்டால்
மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான்
மனிதாபிமான செயல்
மாறாக கீழிறங்கி வரும் ஒரே
காரணத்திற்காக அவர்களை
மட்டந்தட்டவோ கீழ்த்தரமாய்
நடத்தவோ எண்ணாதீர்கள்
அது மிருகத்தனமான செயல்-
துளிர ஆரம்பித்த சொற்ப
நாளிலே தன்னை போல
பூக்களை மொட்டுக்களாய்
பிரசவிக்கும் செடி கொடிகள்
போன்ற உயர் பண்பு மானுட
பிறப்பில் காண்போமேயானால்
வஞ்சகத்திற்கும் வன்முறைக்கும்
இடமில்லாத நல்ல சமுதாயத்தை
காணலாம். நம்மிலும் நம்பிக்கை
இலைகள் துளிரட்டும் காய்ந்தாலும்
உரமாகட்டும். மனிதனோடு
நல்ல பண்புகள் இணையும்
போது இசையுடன் பூக்களை
ரசிப்பது போல
இனிமையான அனுபவம் கிட்டும்.-
உயிர்மெய்யின் உருவாய்ப் பிறந்தோம்...
உயர்பண்பின் உயர்வால்
சிறப்போம்...
-
உயர்ந்த உள்ளம் கொண்டு
நன்றி மறவா எண்ணம் கொண்டு
நிலையான அன்பினை செலுத்தி
உயரிய குறிக்கோள் கொண்டு வாழ்!-
உங்களுடைய வாழ்வில் நீங்கள் சந்திக்கக்கூடிய மனிதர்களின் நற்பண்புகளை,
உங்களுடைய பெற்றோர்களிடம் முதலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம்முடைய பிள்ளைகள் நல்ல மனிதர்களுடனான பழகத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்ற சந்தோஷம், அவர்களுக்கு ஒருவகையான திருப்தியை ஏற்படுத்தலாம்...!!
இன்ஷா அல்லாஹ்...!!-