ஒற்றை
குறுஞ்செய்தியில்
விசாரித்து
இருக்கலாமே
நலமா என்று...!-
இணை இருந்தால்
களிப்பு
இல்லையேல்
தவிப்பு
கனவில் கண்டால்
சிலிர்ப்பு
கற்பனையில் கண்டால்
லயிப்பு
உறக்கம் இல்லையேல்
சலிப்பு
வாசிக்க கிடைத்தால்
ரசிப்பு
இறுதிவரை நீடிக்கும்
துடிப்பு...-
நல்ல கவிதை = நிறைய விருப்பங்கள்
நல்ல நண்பர்கள் = நிறைய விருப்பங்கள்
ஆகையால்
நல்ல கவிதை = நல்ல நண்பர்கள்-
கண்ணீரை மறைத்து
மகிழ்ச்சி நடித்து
சிரிக்கச் சொல்கிறது
சில உறவுகள்...
கண்ணில் நீர்வர
சிரிக்க வைத்து
ரசித்துப் பார்க்கிறது
சில நட்புகள் !!-
தீயவைகளை பார்க்காதே
தீயவைகளை பேசாதே
தீயவைகளை கேட்காதே
என அழகிய தத்துவம்
உதிர்க்கும் புத்தர் சிலையை
நட்பூக்கள் பரிசாக கொடுத்து
இன்பத்தில் திளைக்கச்செய்தனர்!-
அவன் அருகில் இல்லாத போது
தவிப் பூ...
மிக அருகில் இருக்கும் போது
வெட்கப் பூ...
அருகில் இருந்தும் தவிர்க்கும் போது
அனிச்சம் பூ...
மொத்தத்தில் அவளுக்குள்
ஆயிரம் பூக்கள்
பூக்க வைப்பவன்
அவன் மட்டுமே....-
காதல் வளர கொஞ்சம் தேவை தனிமை...!!!
தனிமைகளை தின்று தீர்க்க
வளர்க்கப்படுவதுதான் நட்பே!!!-
நீயில்லாத தனிமையில்
உன் நினைவோடு உறவாடும் என்
மனநிலை...
நீயில்லாத வெறுமையைத்
தவிர்க்க உன் புகைப்படத்துடன்
சண்டையிடும் கோபம்...
எல்லாவற்றுக்கும் மேலாக
நீ சண்டை போட்டதை மறந்து
நானே வந்து கோபமாடா?
என்று கேட்கிறேனே ஏன் தெரியுமா?
என்னால் எப்போதும்
உனக்கு கஷ்டம் என்ற ஒன்று
வந்து விடக் கூடாது என்பதற்காக தான்...
ஆனால்,உனக்கு என்னைப் பார்த்தால்
பைத்தியம் போலத் தெரிகிறது....-
நல்ல நண்பர்களாய் வாழும்
கணவன் மனைவி இடையே
சந்தேகம் காற்றாய் கூட
நுழைவதில்லை!!!-
- 03 -
வெட்கப் பட்டு பேசுவது
காதலில் அழகு...!?
வெட்கம் கெட்டு பேசுவது
நட்புக்கு அழகு....!-