என்னைப் பூப்போல தாங்கும் அவனின் அன்புக்கு ஈடாக,
என் காதலைத் தவிர
தர எதுவும் இல்லை என்னிடத்தில்....-
❣️. தாய்த் தமிழை கண் போல கருதுபவள்...
❣️. எழுத... read more
தொலைவாக சென்ற
உன்னைத் தான்
தேடித் தேடி வந்து
காதல் செய்கிறேன்...
புரிந்து கொள்ள
வேண்டிய
நீ
புரிந்தும் புரியாதது
போல
நடிக்கிறாயே ஏன்?....-
சற்று நேரம் என்னிடம்
பேசிவிட்டுப் போ...
உன்னைக் காணாத,
உன்னிடம் பேசாத
நாட்கள் எல்லாம்
வெறுமையாகவே
முடிந்து போகிறது
என் வாழ்க்கையில்....-
அன்பானவள்...
அனைத்து கவிதைகளும்
ரசிக்கும் படி இருக்கும்...
நல்ல நகைச்சுவை உணர்வும் உண்டு...
சக கவிஞர்களை பாராட்டும் தன்மையும் சிறப்பு...
மேன் மேலும் சிறப்பான படைப்புகள் தந்து,
மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மா 😍💐💐💐-
வரிசை கட்டி
நிற்கின்றன...
ஒவ்வொன்றாக
நிறைவேற்ற
வேண்டும்
அதற்கு,
நீ என் அருகில் வேண்டும்....-
பூக்கள் பேசுமா?
பேசும்...
அவன்
இதழ் விரிக்கையில்,
எனக்குள்ளும் தோன்றும்
கற்பனை இதுவே....-
அலைபாயும் கூந்தல்
அவனது விருப்பம்...
கொஞ்சம் பெரிய பொட்டு
அவனுக்கு பிடித்தது...
அவனே கால் பிடித்து
போட்டுவிட்ட கொலுசு,
அவனது காதல்....-
எழுதிவிடலாம்...
நம் காதல் தோற்ற
இடத்தையும்...
மீண்டும்,
தொடர்ந்த கதையினையும்....-
ஏதும் எழுத விரும்பாத
மனநிலையில் கூட,
ஏதோவொன்று
எழுதிவிட வைக்கும்
உன்
நினைவுகளை மீறி
எப்படிக் கடந்து
செல்வேன்,
என் கவிதை பக்கங்களை....-