நம் உற்றோரை ஒரு வரி தமிழில் எழுத வைத்தாலே அவர்களுக்குள் இருக்கும் மொழியை உயிர்ப்பித்து வைக்கும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!😊-
என் தாயே இன்று உனக்குப் பிறந்தநாள்.
அகவை உனக்கு எத்தனை என்று நான் உன்னிடத்தில் கேட்கிறேன்.
முடிவில்லாமல் முடிவிலியாய் செல்லும் என நகைத்துக் கொண்டே பதிலுரைக்கிறாய்.
உன் அமுத இசைகள் கொண்டு பாடல் பல தொடுத்து தாலாட்டாய் நீ பாடினாய்.
இனிய வார்த்தைகளையே பாலாக்கி உன் மார்பின்வழி எனக்கு நீ ஊட்டினாய்.
நான் உறங்க, மார்பிலே தட்டிக்கொடுத்து நன்னெறி கதைகள் பல நீ கூறினாய்.
உன் அறிவையே பாடமாய் புகட்டி ஆயிரத்தில் ஒருவனாய் என்னை நீ மாற்றினாய்.
தனிமையில் தவித்தபோதெல்லாம் துணையாய் எனக்கு நீயே வந்தாய்.
உன் நூல்களை எனக்குத் தோழனாய்த் தந்து அந்த தனிமையையும் தூர நீ அகற்றினாய்.
முற்றுப்புள்ளி இன்றி முழுமையடைந்த வாக்கியங்கள் ஏதுமில்லை.
என் தாயே, நீயின்றி நான் முழுமை கொள்ள வழிகளும் ஏதுமில்லை.
குருடனாக்கி கைகால்கள் அகற்றினாலும் புழு போலே உன்னிருப்பிடமே வந்தடைவேன்.
என் இறைவியே உன் இருப்பிடமே என்றும் எனக்குக் கோவிலம்மா...!
அடியேனாக மாறி உந்தன் காலடியில் கிடந்தே நானும் மாய்வேனம்மா....!
உயிர்வந்து, உடன்பிறப்பாய் உடன்வந்து, தோல்வியிலே தோள் தந்து, என் உயிராய் வாழும் அன்னையே,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-
சித்தரை யோ தை யோ
தமிழனுக்கு எல்லா நாளும்
திருநாள் தான்
பிறக்கட்டும் புது ஆண்டு
புன்னகை யோடு
சிறக்கட்டும் என்னாலும்
நினைத்தார் போன்று
இருக்கட்டும் கவலைகள் சற்று
தொலைவில் நம் குணத்தை கண்டு
எல்லா நாளும் எல்லையற்ற இன்பத்தை அளிகட்டுமே!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!-
எதிர்பார்ப்பின்றி நன்மை செய்து
பழகு
சேர்ந்தடையும் நன்மைக்கு உரிமை
கொள்.
"இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
-
தமிழின் தலைச்சம் பிள்ளையாம்
சித்திரை பிறந்தநாள் இன்று
விகாரி ஆண்டாக மலர்ந்து...
நேற்றைய கனவினை
இன்றைய நிகழ்வாய் நிகழ்த்திடவும்...
மகிழ்ச்சி அது யாவருக்கும்
வந்திடவும்...
இன்பமாய் வரவேற்போம்...
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ...
நட்புடன்...
-
உயிர் கொண்டோன் உச்சரித்த மொழியது இன்றும் உயிராய் உணர்வாய் நம்மில்😍
வரலாறு மீட்காவிடினும் மறந்திரினும் மறுத்தாலும் அழிந்திருந்தாலும் அழித்திருந்தாலும்....
நாம் முன்னெடுப்போம் வரலாற்றை உருவாக்குவோம் அடுத்தடுத்த தலைமுறைக்கு ஏன் உலகிற்கும் உணர்த்துவோம்😎
இப்புத்தாண்டில்😉
வி~வாழ்த்துக்கள்🙏-
தலை நடுங்கும் தைமகள் பிறந்து வழி பிறக்கட்டும்..
மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாய் இந்த ஆண்டு மலரட்டுமென பொங்கல் பொங்கட்டும்..
வேளாண் குடிகளின் குடி கெடுக்க உருவான வேளாண் சட்டங்கள் இரத்தாகட்டும்..
உழவர் வாழ்வாதாரம் பெருகட்டும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி சட்டமியற்றி..
உழவர் பெருமக்களை கௌரவிக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..-