சிரிப்பில் உலகம் மறைய
பேச்சில் இனிமை ததும்ப
குறும்புத்தன குதுகலத்தில்
சுற்றம் மகிழ்வித்த
எங்கள் வீட்டு கடைக்குட்டி
செல்லத்துக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்❤️-
வாழ்வில் ஒருவரை
முழு மதியாய் கொண்டு
நகர்த்தி செல்ல
இடைப்பட்ட சில பொய்கள்
நிர்கதியாய் நிறுத்தி விட்ட
நொடியில் என்னை கட்டி
தழுவி நின்றான் கண்களின்
ஓரம்-
இருள் அறையில் தனிமையில்
நானும்
விளக்காய் ஒளி வீசி வந்தால்
அவளும்
அடங்கி தீரா நீண்டு செல்லும்
உரையாடல்
காற்றில் கதை பேசி கோமாலியாய்
சிரித்து
இரவை கன் மூடா ஆந்தையாய்
ஆனேன்
உடைமை உறவை உடைக்க
ஒளி அனைத்து சென்றாள்
அவளும்
கட்டி அணைத்தேன் தனிமையை
நானும்-
எங்கள் பட்டறையில்
கேள்விகளுக்கு இடமில்லை
கேலி கூத்திர்க்கு பஞ்சமில்லை,
ஏதும் அறியா வயதில்
அவனால் கற்றுக்கொண்டதை
அவளால் கட்டுப்படுத்தி
பயணப்பட்டோம்
அர்த்தமற்ற கோபம்
அளவில்லா இன்பம்
இரண்டிலும் ஸ்லாகித்து
போனேன்
நட்பின் மடியில்.
-
குளிர்க் காற்றில்
சுற்றம் மறந்து
கால்கள் நகர,
சாலைச் சேற்றில்
கண் அறியாக்
கால்கள் இடர,
கவலைக் கொள்ளா
மனமும் உன்னை
பின்தொடருதடி உன்
கயல் விழி பார்வையை
நோக்க
-
கம்பம் வான் நோக்கக்
கரகம் தலை ஏந்த
காளையர்க் கூட்டம்
தாவணி நோக்க
கொட்டும் பம்பை சத்தம்
உலகம் மறந்து
பரவச நிலையில்
பக்தர் கூட்டம்
சில சில சலசலப்பு
சில்லறை ததும்பும்
உண்டியல்
பக்தன் தோளில்
அம்மன் பரவசம் பெற
சிறு மழை பொழிவில்
மக்கள் மனமும்
குளிர்ந்தது.-
உன் பார்வை பார்க்க
ஏங்கிய தருணங்கள்
உன் உள்ளங்கை என்
இதயத்தை சேர்ந்த
நொடிகளில்
முற்றும் துறந்த மயங்கி
போனேனடி
பிரிவுகள் தந்த வலிகளை
இயற்கையுடன் பகிர்ந்த
பொழுதில்
வெள்ளை நரையுடன் உன்
வரவை எதிர் நோக்கி
காத்து கிடக்க
ஓர் இரவை உன் விரல்
பிடித்து கடத்த காமமில்லா
காதலை
கொட்டி தீர்த்து மனதில்
நீங்கா நிகழ்வாய் நின்றதடி
-
விருதுநகர் விதை
உறுப்பெற்று கொடுத்த
நிழலில் தஞ்சம் பெற்றோர்
பலர்
தழல் ஏறிய பின்னரும்
பேசப்படுகிறது
நிழல் கொடுத்த மரத்தின்
புகழை
"காமராஜ்"
-
பிரிவின் வலியை
உரையாடல்களில் கடத்த
முற்பட்ட முயற்சிகள்
முற்றுப்புள்ளியில் முடிந்தது….
-
வெற்றியை தலையில் ஏற்றாமல்
தோல்வியை பாதாளத்தில் தொலைக்காமல்
வெற்றியையும் தோல்வியையும்
ஒற்றை ஏறில் பூட்டி
கடத்த பயணப்படு
-