உதிர்க்கா உதிரத்தில்,
உதிக்கா கருவில்,
உறைந்திருந்த பசும் பாசம்.
உயிர்ப்போடு சுமந்த மனதில்
தவழ்ந்த மனக்குழந்தை அவள்.💕
ஒளிந்திருந்த தாய்மைக்குள்
ஓடி விளையாடிய செல்ல
தமக்கையாக,தங்கையாக,
என்றும் அவளின் குட்டி
பேசும் பொம்மையாகவே - அவன்.💕
சின்னம்மா என்ற பெயருக்குள்
அடைபடா சிட்டுக்குருவி.😄
-
தாயாகி பெற்றெடுக்கும் முன்பே தாய்மை உணர்வை அள்ளிக் கொடுத்து விடுகிறார்கள் அக்காவின் பிள்ளைகள்...
-
நேற்று தான் உன்னைக் கையில் ஏந்திய
ஞாபகம்.. !!
இன்னும் அந்த பிஞ்சு ஸ்பரிசத் தீண்டல்கள் நெஞ்சில் பசுமையாய் படர்ந்து இருக்க...
அந்த வெண் பாதங்களின் கதகதப்பில் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறேன்.... நான்... !!
ஆனால் தவழ்ந்து , விழுந்து , எழுந்து , ஓடி வளர்ந்து விட்டாய் பொழிலா.....நீ !!
உன் முதல் நாள் பள்ளிக்கூட அனுபவத்திற்கு முத்தமிட்டு வழி அனுப்ப ஆசை இருந்தும்,
தூரம் இருந்தே உன்னை ரசிப்பதிலும் அலாதி இன்பம் ... என் செல்லமே!!!
பெரு மகிழ்வின் துளிகள் சில விழியோரம் கசிய , உரக்கச் சொல்ல வேண்டும் என் மகன் வளர்ந்து விட்டான் 😍
-
காலில் முள்குத்தும்போதெல்லாம், சிறுவயதில் நுனி ஊசியில் முள் எடுத்த சித்தியின் நியாபகம் ..
வார்த்தையில் முள்ளையள்ளி வீசிவிட்டுப் போனாள் அண்மையில் சண்டை போட்டு ..
பழைய சித்தியை மீண்டும் தேடுது மனம் ..-
சித்தி..
சித்தி எங்கள் மனங்கொத்தி
சிட்டாய் சுற்றும் கொண்டலாத்தி
சிந்தை கவரும் வண்ணாத்தி
சிறகில்லாப் பறக்கும் வானூர்தி
சிரிக்கும் அழகு செம்பருத்தி
சித்திரை பௌர்ணமி வான்மதி
சிற்றடிசிலாட எனை நிறுத்தி
சிறுபொழுதும் தன் வசப்படுத்தி
சிணுங்கும் என்னை ஏமாத்தி
சிற்றுண்டி தந்து எனை அமர்த்தி
சிண்ட்ரெல்லா கதை மாத்தி
சிங்கம் புலி கதைக்குள் புகுத்தி
சின்னவள் எனைச் சேர்த்தி
சிலிர்க்க வைக்குமவள் நேர்த்தி
சிலுப்பும் என் தலைகோதி
சிங்காரம் செஞ்சு பட்டு உடுத்தி
சிறுநகை பூக்கும் செவ்வந்தி
சில்லெனத் தாக்கும் மதுவந்தி
சித்தி எங்கள் மனங்கொத்தி
சிமிட்டும் தாரகை இளம்பரிதி !!-
அப்பாவிடம் அடம்பிடித்ததை எல்லாம்
அளித்து மகிழ்ந்தேன் அவளுக்கு
அக்கா என்ற கடமையோடு....
அம்மா என்று என் மகள் என்னிடம்
கேட்கும் முன்னே கொடுத்து விடுகிறாள்
சித்தி என்ற உரிமையோடு!!!-
என் குழந்தையை பெற்றது போல் உணர்த்தேன்
என் அக்காவின்/ அண்ணனின் குழந்தையை பார்த்த போது.
- சித்தியின் பெருமிதம்.
-
உன் புன்னகை திரட்டி
பூட்டிக்கொண்டேன்
என் இதயத்திற்குள்..
என்றும் உனக்காக நான்..
உன்னை ரசித்தேன் நான்..
-