QUOTES ON #ஒற்றுமை

#ஒற்றுமை quotes

Trending | Latest

மதத்தால் மதிகெட்டு விதிகெட்டு வீதிக்கு வந்தவர்கள் பலர்.
ஆனால் மதம் மட்டும் மடியாமல் மனித மனங்களிலே
மலர்ந்து கொண்டே இருக்கிறதே.
ஜாதி என்பது சதிகாரர்களின் சதி அதில் விழுந்து விட்டால் உனது கதி அதோகதி.
உலகில் முதலில் பிறந்தவன் நீக்ரோ இனத்தவன்.
அதை மறந்தவன் மக்கள் இனத்தை சேர்ந்தவன்.
மனிதனாய் பிறந்து மாக்களாய் வாழ்வதை விட, அந்த மாக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனாய் வாழ விரும்புகின்றேன்.
ஆனால் முடியவில்லையே ஐயகோ என்ன செய்வது.

-


26 JUL 2020 AT 11:10

அதன்
ஆணிவேராக
இருக்க வேண்டிய
புரிதல் இல்லையேல்
ஒன்றுமில்லாமல் போகும்...

-


11 JUN 2020 AT 17:32

அடைக்கலமற்ற
பறவைக்கு
ஒற்றுமை தான்
பசியாற்றும்!

-


5 FEB 2020 AT 5:48

நீயா நானா
என்பதில் அல்ல
நீ பாதி
நான் பாதி
என்பதில் உள்ளது
நீ போற்றும்
பெண்ணியமும்
நான் ஆராதிக்கும்
ஆணாதிக்கமும் !!





-


1 NOV 2018 AT 8:36

நமக்கு யாரும் தேவை இல்லை என்று
நினைப்பதால்...

நாம் மற்றவர்களை விட உயர்ந்து/தாழ்ந்து இருக்கிறோம் என்ற எண்ணம்
இருப்பதால்...

நாம் நமக்குள்ளே சுவர்களை கட்டிக் கொள்வதால்..

-


1 NOV 2018 AT 0:14

நாம் ஏன் ஒற்றுமையாக இல்லை ?

நஞ்சில் பற்றிய சாதியுடனும்,
நிறத்தில் தொற்றிய வியாதியுடனும்,
நெஞ்சில் வற்றிய ஈரத்துடனும்,
மனதில் அகற்றிய மனிதத்துடனும்,
வாழ்வதால்...

-


25 NOV 2019 AT 6:04

ஒன்று கூடி போராடி
கண்ட வெற்றிகள் எல்லாம்,
வேற்றுமையில் ஒற்றுமை
கொண்டதால் மட்டுமே
கிட்டியது!

-


31 OCT 2018 AT 22:07

பொதுவாக எந்தவொரு நாடும், ஒரே மதம் அல்லது ஒரே இனம் அல்லது ஒரே மொழி என ஏதேனும் ஒரு புள்ளியில் ஒன்றுபட்டு நிற்கும். ஆனால் இந்தியா என்பது பல மதங்களின், பல இனங்களின், பல மொழிகளின், பல கலாச்சாரங்களின் ஒன்றியமாக இருக்கிறது. இருப்பினும், 'இந்தியன்' என்ற புள்ளியில் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம். இந்த வேற்றுமையே இந்தியாவின் சிறப்பாக இருக்கிறது. இதனை பலரும் இன்று மறந்து வருகிறோம். இந்த வேற்றுமையை நாம் அழிக்க முற்படும்போது, நமது ஒற்றுமையை இழக்க நேரிடுகிறது. என் கருத்தை ஏற்காத ஒருவரை நான் எதிரியாக நினைத்தால் அங்கேயும் ஒற்றுமை உடைகிறது. எனவே வேற்றுமையை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால், நம் ஒற்றுமை இன்று திறக்கப்பட்ட 'இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின்' சிலையை விட உறுதியானதாக‌ இருக்கும்.

-


31 OCT 2018 AT 21:58

சாதியில் உயர்வு உமக்கே என
நிறத்தில் வெண்மை கொண்டான் என
தகுதியில் உடையவன் இவன் தான் என
கல்வியில் பெரியவன் நீ தான் என
தொழிலில் சிறப்பு உனக்கே என
சுற்றத்தில் தலைவன் தாமே என
சுயநலம் இன்றி அவனொருவன் கூற
சூழ்ச்சியின் சுழியில் அவன் அன்றே சுழல
அவன் விதைத்த நல்விதையில்
நலம் காணா நயவஞ்சகர்கள் நாம்...
அவன் வளர்த்த ஒற்றுமை மூலிகையில்
வேற்றுமை பூ பூக்க
களை என பிடுங்கி எறிந்தோம்...
இன்று மூலிகை தேடி முப்பொழுதும் அலைகிறோம்...

-



ஏற்றிடுவோம் .......!

-