முத்தமிழின்
மூன்று 'லழள'கரம்..
கரம் சேரும்
உன்னதம்
"தொழிலாளர்"-
விரும்பிய வேலை
வாய்க்கவில்லை!
அமைந்த வேலையினை
அழகாக்கிவிட்டேன்!
நேரங்கள் மீட்கப்படாமல்
நீள்கின்ற பொழுதிலும்
சிறப்பாக செய்யவே
சிந்தனை ஓடுகிறது!-
என் வேலை
ஒரு பாடம் ஒரு பட்டமென படிக்க மாட்டேன்
ஒரு வேலை ஒரு அலுவலகமென நிலைக்க மாட்டேன்
ஒரு துறை ஒரு இடமென இருக்க மாட்டேன்
ஒரு மாவட்டம் ஒரு மாகாணமென வசிக்க மாட்டேன்
பிடித்தவற்றில் கால் பதிப்பேன்
பிடித்ததை அடைய சூளுரைப்பேன்
பிடித்ததை அடைந்தும் தீருவேன்
பிடித்ததை பெற்றுவிட்டால்
அடுத்ததை தேடி அணி வகுப்பேன்
அதையும் அடைய பாடுபடுவேன்
அதை அடையும் வரை அயராது போராடுவேன்...
அதிலும் வெற்றி பெறுவேன்
என்னை பிடித்து வைக்க இங்கு எவருமில்லை
எவரின் பிடிக்குள்ளும் என்றும் நானில்லை
என்னோடு பயணிக்க வேகம் தேவை
என்னை புரிந்து கொள்ள ஞானம் தேவை
மொத்தத்தில் தில்லாலங்கடி ஜெயம் ரவி
என்பர் என்னை நன்கு அறிந்தவர்...
-
உழைத்துக்களைத்தும்
உயர்ந்து களித்தும்
வியர்வை வழி
உழைப்பை பகிரும்
உழைப்பாளர்களுக்கு
மே தின நல் வாழ்த்துகள்
💐🙏💐-
எந்த வேலை கொடுத்தாலும்
விரைவாகவும்
நிறைவாகவும்
செய்ய விரும்பிடுவேன்-
கவிதைகளை சுமந்து...
கவி உலகில்
கவி மாளிகைகள் கட்டி
கவித்தோட்டம் அமைத்து
கவி பாதையில் நடந்து வரும்
கவிதை உழைப்பாளர்களுக்கு
உழைப்பாளர் தின வாழ்த்துகள் ✍️-
வெளியில் உழைக்கும்
ஆண்களுக்கும்
வீட்டில் உழைக்கும்
பெண்களுக்கும்
இனிய உழைப்பாளர்கள்
தின நல்வாழ்த்துகள்
💐💐💐🍫🍫🍫-