QUOTES ON #உடைந்தகண்ணாடி

#உடைந்தகண்ணாடி quotes

Trending | Latest
25 JUL 2021 AT 19:03

என்ன ஒட்டினாலும்
எங்கும் எதிலும் சேராமல்
தனிமைத்தருணங்களை
தனக்கானதாக்கியது
உடைந்து நொறுங்கிய 
கண்ணாடிச்சிறகுகள்

-



பிம்பம் ஏந்திய
கண்ணாடி

-


24 MAY 2018 AT 5:40

உடைந்த கண்ணாடி இணைந்தாலும்
அதன் பிம்பத்தின் விரிசல் ஒன்றாவதில்லை...

உடைந்த காதல் மனங்கள் பிரிந்தாலும்
அதன் எண்ணத்தின் விரிசல்
இரண்டாவதில்லை...

-


23 MAY 2018 AT 21:44

பிம்பம் காட்டிய
உடைந்த கண்ணாடியைப்
பார்த்து உள்ளம் கேட்டது,
உடைந்த பின்பும்
ஓடிக்கொண்டிருக்கும் எனக்கு
துணையாக வந்தாயா ?
என்னைப் போலவே
உனக்கும் வலிமை அதிகம் தான்!

-


16 APR 2020 AT 15:00

உனக்குப்
பிடித்தவளாகவே
இருக்க முயன்று
தோற்றுப் போய்
சுயம் தொலைத்த
என்னைக் கேலி
செய்கிறது
கண்ணாடி
"இதற்காகவா
இத்தனை பேரன்பு
காட்டினாய்"
என்று !

-


23 MAY 2018 AT 23:20

//உடைந்த கண்ணாடி //


கண்ணாடிகள் உடைந்தாலும் பிரதிபலிக்கும் உண்மை ,
நம் உடைந்த இதயத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பேதத்தை மறந்தது விடுகிறோம்
கண்ணாடி அப் பிம்பங்களுக்கு ஒரு போதும் உரிமை கொண்டாடுவதில்லை

-


24 MAY 2018 AT 17:46

பிரிந்த உறவுகள் 💔💔
உடைந்த கண்ணாடி போன்றதாகும்....
அவற்றை அவ்வாறே விடுதல் நன்று..
ஏனென்றால்
சிலசமயம்
சேர்க்கும் கைகளையே அவை
காயப்படுத்திவிடும்......

-


27 DEC 2020 AT 22:23

<<<<<<<<<<×>>>>>>>>>>

என் கண்ணாடி மனதில்
அனைத்தையும் எதிரொளிக்க
நினைத்தேன் ஆனால்
என் மனமோ பல கற்களால்
உடைந்த ஜன்னல் கண்ணாடி!

-


28 APR 2019 AT 5:36

காதல் கண்ணாடி
(முழுமையும் கீழே)....

-


23 MAY 2018 AT 23:23

ஏன் காதலில் தோற்றவர்கள் "நான் உடைந்த கண்ணாடி" என்று கூறுகிறார்கள்...
கண்ணாடி உடைந்தால் என்ன...
அதனுடைய அழகு காட்டும் திறமை குறைந்து விடாது...

-