என்னவளின் மடியிலே தலை வைத்து
அழகிய அவள் விரல்கள் என்
தலை முடியில் நாதம் இசைக்க
தென்றலாய் அவள் சுவாச காற்று வருட..
தேனிசையாய் என்னவள் என்னுடன்
உரையாட அதை இரசிக்கும் போதே
அழகாய் அவள் நெற்றி முத்தமிட!!
அப்படியே நின்று விடாதா இந்த பூமி!!!
இல்லை இந்த ஜென்மம் தான் போதுமா??
கால ஓட்டத்தின் இறைவனே
உன் காலத்தின் பாதியை
எனக்கு வரமாக கொடு....
என்னவளின் மடி மீதே என்
ஆயுளின் மீதியை கழிக்க....
-
உள்ளிருக்கும் அன்பு ❤️
ஒன்றுக்கு எல்லை இல்லை..
அந்த ஒன்றை தவிர வேறொன்றிக்கு என் இதயத்தில் இடமில்லை...
அன்பு ஒன்றுதான் அனாதை-
விவரிக்க முடியா நினைவுகள்
விரைவாய் கடந்த வாழ்க்கை,
நகரும் காலம் மாறலாம்
நிலையான அன்பு என்றும் மாறாது❤️-
தோல்வியும் சுகம் தான் உன்னிடத்தில்!!
எத்தனை முறை இடறி விழுந்தாலும்
உன் நிழலையே சேர்கிறது என் மனம்..
அதுவே என் குணம்...-
விண்மீன் 🌟 இல்லா வானில்
விடியாத இரவை தனிமையில்
கழிக்கிறது ஓர் பிறை நிலவு... 🌙-
அழகிய ஆழ்கடலில் நீந்திச் செல்லும்
நிலா போல நிசப்த்தமாய் உன்னை
கடத்தி நித்தமும் உலா வருகிறேன்,
தொய்வில்லா நம் காதலினால்...-
ஆழ்ந்த இரவில்
தவழ்கின்ற அலை மேலே
உலவுகின்ற நிலா போல்
தெளியாத இரவில்
தேடுகின்ற புதையலாய்
நிதம் தோன்றி வதம் செய்து
ஓடி ஒழிகிறாய்..
தென்றல் தீண்டிய மனம்
ஏக்கம் கொண்டு காத்திருக்கிறதடி
ராசாத்தி...
உன்னை மனத்து, அணைத்து
உயிர்பித்துக் கொள்ள-
உன் மீதான என் உன்னத உணர்வை
புரியாமல் நீ உதரித் தள்ளினாலும்,
கோபமெனும் தீ கொண்டு உன் மனதில் மறைத்திறுக்கும் மாயை தீயிட்டு கொழுத்தியாவது உன் மனதில்
புகுந்தெழுவேன் ராசாத்தி..-