சந்தோஷத்தையும்
துக்கத்தையும்
சரிசமமாக
பார்க்க முடிவதில்லை !
ஒரு அவமானத்தைப் போல
ஒரு ஆனந்தமானது
மனதிற்கு உரமிடுவதில்லை!
ஒரு தோல்வியைப் போல
ஒரு வெற்றியானது
வாழ்வை வளப்படுத்துவதில்லை !
ஒரு துன்பத்தைப் போல
ஒரு இன்பமானது
நீண்ட பொழுதுகள்
நீடிப்பதில்லை...!-
எல்லா கொண்டாட்டங்களுக்கும் இடையே
தோன்றி மறையும் சில முகங்கள்
எவ்வளவு வெறுமையிலும்
தோன்றுவதில்லை
எந்த முகமும்-
வார்த்தைகள் கனிவையும்,
காயத்தையும் தருகிறது
எண்ணங்கள் ஏமாற்றத்தையும்
எதிர்பார்ப்பையும் தருகிறது
எழுத்துக்கள் ஆர்வத்தையும்
தேடலையும் தருகிறது
புன்னகைகள் அமைதியையும்
சகிப்புத்தன்மையையும் தருகிறது
நினைவுகள் நிஜத்தையும்
நிழல்களையும் தருகிறது
வாழ்க்கை பொறுமையையும்
பெருமையையும் தருகிறது-
எல்லோருக்குள்ளும்
கவிதை இருக்கிறது,
சிற்பமாய், ஓவியமாய்
இசையாய், காதலாய்
சிலருக்கு மட்டுமே
வாழ்க்கையாய்....-
மனம் இன்றி மணந்தேன்...
இப்படிக்கு
-கல்லறைத் தோட்டப் பூக்கள்-
கடந்து வந்த பாதையின்
நீள அகலத்தையே அளந்து
கொண்டிருக்கும் மனதிற்கு...
எதிர் வரும் பாதையின்
மேடு பள்ளங்களை அறிய
எங்கு நேரமிருக்கிறது...!-
நினைத்த போதெல்லாம்
தூக்கி வைத்து கொண்டாடலாம்
பின் தரையில் போட்டு மிதித்து
உடைக்கலாம்...
பிறகு பாவப்பட்டு அதையெடுத்து
ஒருவாறாக ஒட்டி விடலாம்...
ஓரம் போடலாம்...
என்ன வேண்டுமானாலும்
செய்யலாம்...
வேறெதுவும் கலக்காமல் வெறும்
அன்பினால் மட்டும் செய்யப்பட்ட
இதயங்கள்...
எப்போதுமே ஒரு பொம்மை தானே
மனிதர்களுக்கு...!-
எதுவாக வெளிப்பட்டாலும்
அன்பு அழகு தான்...
அன்பாக வெளிப்படும்
எதுவும் அழகு தான்...!-