பொய் சாட்சியும்
அச்சப்படும்
மனசாட்சிக்கு முன்...-
அவள்: ஏனென்று தெரியவில்லை.. இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் அவன் தான் தெரிகிறான்😍..
அவள் மனசாட்சி: என்னிடமே நடிக்காதே... தேடித் தேடி அவனிருக்கும் இடத்தையே பார்த்தால் அவன் தான் தெரிவான்😏😏-
தவறை
திருத்திக் கொள்ள
பிழையை அழிக்க
நினைத்தும்
ஏனோ உரியவரிடம்
மன்னிப்பு கேட்ட பின்பு
தான் மனம் சாந்தமடையும்
என்று தன்னை தானே
சமாதானமும் செய்யும்
மனசாட்சி-
"மனசாட்சிக்கு பயந்து நடப்பவன் நான்"
சொல்லும் போது தான் தெரிகிறது சிலருக்கு மனம் என்று ஒன்று உண்டென்று...-
என்னுள்ளே தேடினேன், அவர்களிடையே தேடினேன் கண்டு பிடித்து விட்டேன் மனசாட்சியை,இதற்கு மனசாட்சி என்பதை விட மனதின் சாட்சி என்று பெயர் வைக்கலாமே, ஏனெனில் ஒவ்வொருக்கு ஒவ்வொரு நியாயம் இருப்பதால் அதன் உள்ளேயும் வேறுபாடுகள் இருக்கின்றது. தேடுகிறேன் உண்மையான மனிதனின் சாட்சியை நெருங்கிவிடுவேன்!
-
அன்றைய இரவில்
என்றுமே இல்லாத
ஓர் ஒற்றை அதட்டல்,
விடியாத காட்சியின்
குமுறல் தான் என்று,
திறந்த ஜன்னல்
மூடி வைத்து,
உறங்கிய கனவில்,
ஊமைக் குரலில்
மனசாட்சி!-
இதற்கெல்லாம் யார் சாட்சி?!?....
சிரித்தவனை பார்த்துச்
சிரித்தது அவன் மனசாட்சி..-
சாட்சி சொல்ல வந்தவர்
மனசாட்சியை கீழே
கழற்றி விட்டு
கூண்டில் ஏறினார்....
-
மனசாட்சி படி வாழ்கிறவர்கள் எவரும்
குற்ற உணர்ச்சிக்கு ஆளாக விரும்ப மாட்டார்கள்-