பத்து
உன் பத்து விரல் மீது
நம்பிக்கை வைக்க...
என்றும் வாழ்வில்
முன்னேற்றம் காண்க...
-
31 DEC 2018 AT 6:23
6 JUL 2019 AT 23:56
சாலையோர
திடீர் உணவகங்களாய்
தள்ளுவண்டி கடைகளில்
கேட்பாரின்றி
சீந்துவாரின்றி
கம்மங்கூழும்
கேப்பைக்கழியும்
தொட்டுக்கொள்ள
கொத்தரை வற்றலும்
வறுத்த மிளகாயும்
சோற்றுவடாமும்
மண்பானைகளில்...
ஒரு சொம்பு வெறும்
பத்துரூபாய் மட்டுமே!!!-
26 AUG 2019 AT 18:14
பணம் பாதாளம்
வரை பாய்ந்தாலும்
அன்புக்காக
உதவும்
உள்ளங்கள்
இன்னும்
இருக்கத்தான்
செய்கின்றன!-
26 AUG 2019 AT 17:46
பணம் பத்து மட்டுமா செய்யும்?!?
பார்த்தும் செய்யும்!!
பல்லாயிரமும் செய்யும்!!!-
26 AUG 2019 AT 18:05
எல்லாவற்றுக்கும் விலை
பேசும் பணமே
மனித உயிர்க்கு விலையுண்டா?
சென்ற காலத்திற்கு விலையுண்டா?
இழப்புகளுக்கு விலையுண்டா?
உணருங்கள் மனிதம் மாண்டு
பணத்தை வாழ வைக்கிறதா?!!-
23 OCT 2020 AT 23:41
•••பத்து பைசாவோ பத்து கோடியோ
பணத்தின் இருப்பைப் பொறுத்ததல்ல,
மனிதனின் மதிப்பு•••
•••பத்து ரூபாய் கூட
இல்லாத போதும் அவனது
நாணயமான குணத்தினை
ஈட்டிக் காத்தலே ,
உண்மையான மதிப்பாகிறது•••-