காலம் சலித்தெடுத்த
கசடு நீ...
உனை அப்புறப்படுத்த
மனமின்றி புதைத்து வைத்த
அசடு நான்...-
7 AUG 2021 AT 20:28
3 NOV 2019 AT 12:20
நீ எனும்
மாயையின்
மயக்கமே
தீரவில்லை!
தீ எனும்
சாயலில்
இப்படி
திரியாகி
தீண்டுகிறாயே
என்னை!-
6 SEP 2020 AT 16:07
கோர்த்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
அறுபட்டே போனதால்
குறிலும் நெடிலுமின்றி
எதுகை மோனையின்றி
எதிலும் இணையாத
இரயில் தண்டவாளமாகி
ஒரேயொரு எழுத்தை மட்டும்
தாங்கிப்பிடித்து தாலாட்டுகிறது
என் எழுதுகோல்!
அதுதான் ....நீ என்னும்
மந்திரக்கோல்!-
10 OCT 2019 AT 22:10
வருவதும்
போவதுமாய்
நீ வேண்டாம்!
வாசிக்கவும்
வசிக்கவுமே
நீ வேண்டும்!-
24 OCT 2019 AT 12:27
நீ முறைக்க
நான் சிரிப்பேன்
நீ பறிக்க
நான் பூப்பேன்
நீ பறக்க
நான் சிறகாவேன்
நீ கடிக்க
நான் இனிப்பேன்
நீ விலக
நான் தொடர்வேன்
நீ துயில
நான் ரசிப்பேன்
நீீ பிறக்க
நான் சுமப்பேன்
நீ நடக்க
நான் துணையாவேன்...!-
12 FEB 2020 AT 14:33
சின்ன சின்ன
மகிழ்ச்சியில்
இருக்கிறாய்
நீ என்னுள்ளே
எப்பொழுதும்
எல்லா
நாட்களும்
புன்னகை
முகமாகவே
தொடர்கிறது...
-
10 OCT 2020 AT 14:12
தொகுத்து
வைத்ததில்
மறைவாய் நீ....
கிழித்துப்
போட்டதில்
கந்தலாய் நான்...-