நதியினில்..
நீந்தியது,
ஒரு சருகு!
அதில் பயணம்
செய்தது,
ஒரு எறும்பு!
எறும்பின் நம்பிக்கையோ..
அந்த சருகு மீது!
சருகின் நம்பிக்கையோ..
அந்த நதி மீது!
நம்பிக்கை உள்ளவரை..
நகரும் இந்த பயணம்!-
காலங்கள்
கடந்து
செல்கின்றது
என
நினைத்து
விடாதே!!!
உனக்கான
விடியல்
மிக அருகில்
என எப்பொழுதும்
முயற்சி செய்!!!!!-
தன்மானம்
போன்றதொரு தோழனில்லை...
அவமானம்
போன்றதொரு ஏணியில்லை
நம்பிக்கை
போலொரு ஆயுதமில்லை
நல்மனம்
போலொரு விடியலில்லை
கலக்கம்
கொண்டால் நிம்மதியில்லை..
கலங்காத
மனதிலும் தெளிவுயில்லை....
தேடலின்
வலிமை தோற்பதில்லை..
தொடுவானம்
கூடத் தூரமில்லை....-
காலாவதியான பட்டியலில்
இணைந்து பல காலம் தாண்டி...
மறதியின் துகள்கள் தூசென
படிந்து...
அமில தெறிப்புகளில்
பூச்சுகள் உதிர்ந்து...
அயிர்ப்புகள் ஆங்காங்கே
உளுவாகியரித்தது போக...
எஞ்சியிருப்பதென்னவோ
வெற்றுக்கூடான
நம்பிக்கைகள் தான்...
எப்போதுமதை சோதிக்கிறேனென்று
உடைக்காமலிருப்பதே நலம்...!-
சில நேரங்களில் நமக்கு தெரிந்து
சரியென்பது வேறாக இருக்கலாம்...
ஆனால் பிறரின் நம்பிக்கை என்பது
வேறொன்றாக இருக்கலாம்...
அந்த நம்பிக்கையை உடைத்து
சரியென்பதை நிரூபித்து என்ன
செய்ய போகிறோம்...
இருந்து விட்டு போகட்டுமே அவர்களின்
நம்பிக்கையே சரியானதாக அவர்களுக்கு...
யாருக்கும் பாதகமில்லை எனும் போது...!-