சுருண்டு படுத்தாள்
செல்ல மகள் கண்களில்
நீர் ததும்ப...
என்னை பெற்றவள்
இருந்திருந்தால் பக்குவமாய் சமைத்திருப்பாள்....
அவளை பெற்றவள்
இருந்திருந்தால் இதமாக
அணைத்திருப்பாள்...
ஏதும் செய்யாமல்
நிற்கின்றேன்
மனம் நெகிழ்ந்து
தாயுமானவனாய்....
-
23 NOV 2018 AT 10:26
5 OCT 2017 AT 22:46
I'm a Dustbin.
I have only memories that
SHE left for me ...-
5 OCT 2017 AT 16:29
அரசியல் ஆத்திசூடி... (நல்ல அரசியல் வாதிகளுக்காக)
அரசியல் செய விரும்பு...
ஆளுவது அறிவு...
இரக்கத்தைக் கடை பிடி...
ஈகை செய்...
உள்ளதைப் பேசு...
ஊழலை விரட்டு...
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்...
ஏற்பது கடமை...
ஐயமின்றிச் செயல்படு...
ஒழுங்கை நிலை நாட்டு...
ஓயாது உழைத்திடு...
ஒளவையை மதித்திடு...
அஃதில்லையேல் வராதே...-
9 JAN 2018 AT 8:39
தமிழே...
வாழ்ந்தாலும் உனக்கு சேவகியாய் வாழ்வேன்
வீழ்ந்தாலும் உனக்குக் காலணியாய் வீழ்வேன்....!-
9 OCT 2018 AT 22:32
திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...-
5 NOV 2017 AT 14:52
சிற்பி நீ...
உளி நான்...
சிற்பமாய் காதல்...
சிப்பி நீ...
முத்து நான்...
கடலாய் காதல்...
வார்த்தை நீ...
வாக்கியம் நான்...
காவியமாக காதல்...
வேர் நீ...
மரம் நான்...
கிளைகளாகக் காதல்...-