தாழையின் தாபத்துயில் கனவெல்லாம் காதல் மணம்
கசிந்தொழுகும் காமன் துளி
தாழிட்ட பேழை மனம் ஆழ் தொட்டு உருகும் உயிர்
தேனாழி தன் பூவாழி மணத்தை மன்மத ஒளி வாங்கும் மந்திரன்
கோதையின் குணம் குழைந்தை சந்திரன்
இரவெல்லாம் வாசமுடு நேசம் உறவாடும் மதியவனும்
மதியவன் மணம் சூடும் தாழைத் தாரகையிம்
தாளாத வெள்ளத்தில் மூழ்காத காதல் சின்னமே !-
ஆண்மை போற்று ஆளுமை செய் !
நான் கவிஞன் அல்ல ஆண்மகன்
ஈரமான சில நினைவுகள் பாரமான சில பனித்துளி
அடர்ந்த வனக்காட்டில் குளிர்ந்த மனச்சிறை
கசியும் காதல் வலி கண்ணத்தின் கதகதப்பில் ஆறுதல் தேடும் மனம்
அதற்குள் ஆனந்தமாய் பூ மணம் கமழும் தாழை மலர் !
-
நீல மழைச்சாரலில் நாணலாய் நலிந்தாடும் நாணம்
அவள் செவ்விய காதோரம் நனைந்தாடும் நானும்
கார்காலத்தில் பல கவிதைகள் படைத்தோம் பரந்த பூமியில் பிறந்த புத்தகமாய் அனைவரும் ரசிக்கும்படியாய் இருந்தது எங்களின் காதல்
காதோர கவிதை
ஜிமிக்கியும் சில கவிதை சினுங்கல்களும் !-
ஆயிரம் கவிதைகள் நெஞ்சுக்குள்
நீ கேட்ட இந்த நொடி கனத்துப் போனது என் இதயம்
காணாமல் போனது என் காதல் கவிதைகள்
காணாமல் போன என் காதல் கவிதைகளை
உன் கண்களுக்குள் தேடுகிறேன்
அது என் காதலைச் சத்தம் போட்டு முத்தமிட்டுக் கொண்டு இருக்கிறது
உந்தன் பரந்த மார்பில் என் உயிர் துளிகளைத் தூவியபடி
இனி உள்ளத்தோடு உயிராய் உன்னை ருசிக்க வேண்டுகிறேன்
உன் நெஞ்சோடு புதைந்து அன்போடு உனை ஆழம் பார்க்க வேண்டுகிறேன்
கடல் போன்ற உந்தன் ஆழமான அன்பில் மூச்சு முட்டும் வரை
உன்னோடு நீந்திக் கடக்க வேண்டுகிறேன்
நித்தம் நித்தம் முத்தம் சுவைக்க வேண்டுகிறேன்
உன் முகத்தோடு முகம் புதைந்து முழுமை பெற வேண்டுகிறேன்
இன்னும் வேண்டுகிறேன் இனியும் வேண்டுகிறேன் என் காதல் தெய்வம் உன்னை
கட்டியணைக்க, காதல் செய்ய, கவிதை பேச, முத்த பூக்கள் தூவி
நொடிக்கொரு பூஜை மணிக்கொரு அணைப்பு அடிக்கொரு முத்தம் என இதயக் கோவிலில்
உன்னை ஈரேழு ஜென்மம் இதழ்கள் பதித்து இமைக்குள் காத்து காதல் செய்ய வேண்டுகிறேன் !
என்னை ஏற்றுக்கொள் நொடிப் பொழுதில் உன் இமையோடு இதழோடு எனை ஈர்த்த உன் இதயத்தில் இதழ்கள் பதித்து நான் இருப்பேன்
இப்படிக்கு உந்தன் காதல் !-