காத்திருப்புக்கள்
வலிப்பதில்லை...
ஏமாற்றத்தை
பரிசளிக்கும் வரை ...-
காலம் கடந்தும் சலிக்காத
அவள் காத்திருப்பை
ஆசிர்வதிக்கும் வேப்பம் பூவும்
ஆசிர்வதிக்கப்படுகிறது...
புன்னகைத்தவாறே
அவள் தலையில் விழுந்த
பூக்களை தட்டி விடும்
அவன் விரலின் அன்பான
தீண்டலில்...!-
எழுதப்படாத
கவிதைகளில்
காத்திருக்கிறது...
உன் அழுத்தங்களில்
எனையிழந்த
ஆழங்களும்....
உன் மாற்றங்களில்
வெறுமை தந்த
தடயங்களும்!-
எதையோ தேடி
வெளியேறும்
எதிர்பார்ப்புகளின்
ஓசையில்
ஏக்கங்கள் என்னவோ...
இன்னும்கூட
ஒலியடங்காமல்
உன் அழைப்புக்கான
காத்திருப்பில்!-
எப்பிழையும்
எனதே என
இறைந்து கிடந்த
காத்திருப்புகளில்
உன் உள்ளங்கை
வாசம் மட்டுமே
எனக்கான ஆறுதல்!-
கணக்கெடுத்து வருகிறேன்
பிறருக்காக அவன்
செலவழிக்கும் நொடிகளை...-
நினைக்கத் தவறி விடுவேன் என்று எண்ணி
நித்தம் கண் முன்னே வந்து நின்று
நிகழ்வுகளை அள்ளித் தந்து
நினைவுகள் மட்டும் ஏன் விட்டுச் சென்றாய்...-
கருவிழியில் கண்ணிமைகள் கரித்துக்கொள்ள..
அள்ளாடி தள்ளாடி அங்கம்நோக..
இருதயத்தில் சில்லுசில்லாய்
நொறுங்கும் அண்ணலின் நிலையெண்ணி..
பூமாலை பொழுதில்
பதுமினி புலம்புகிறாள்..
அந்திகாவலன் துணையோடு..
ஆல்விழுதுகளும் ஆறுதலுரைக்க...
மதியிலிருந்து பதியை விலக்காமல்...
மதுர இதழ் துடிக்க...
மங்கையவள் காத்திருந்தாள்...
வாடிய மேனியை வாரியணைத்து வாஞ்சையோடு காதல் கொள்ள...
மன்னவன் வருகைக்காக.
-
மிக நீண்ட இடைவெளியில்
மனநிறைவுடன் நீயிருக்க
மண்டியிட்ட அதே நிலையில் நான்
உனக்கான காத்திருப்பில்-
வார்த்தைகள் யாவும்
தொலைந்து போன
கணத்தில்
அளித்த
விண்ணப்பங்கள்
அனைத்தும்
காத்திருப்பின்
கனவுப்பரப்பில்-