QUOTES ON #காதல்_அழகு

#காதல்_அழகு quotes

Trending | Latest
16 MAY 2021 AT 20:30

அந்திவேளையும்
ஆவினங்களும்
இசை தரும்
இன்ப நாதத்தில்
ஈரெண்டு காதல் விழிகளில்
உறவாடியே ஆனந்த இசை
ஊஞ்சலில் இலயித்திருக்கிறது!!

-


16 MAY 2021 AT 18:16

கண்ணாளனின் தோள்
சாய்ந்திருக்கையில்
காணும் யாவும் அழகே!!!
காதலோ கொள்ளை அழகே!!!

-


16 MAY 2021 AT 18:28

வில் போன்ற கண் கொண்டாள்
கல் கரைய குரல் கொண்டாள்
என்னை கவர் நேசம் கொண்டாள்
என்னுடைய பெண்ணவளே!!
உள்ளம் கொண்ட பொன்மதியே
கள்ளமில்லா வெண்பனியே.....
கண்ணன் என்னை வீழ்த்தினாயே.....
எண்ணமதை கொள்ளையிட்டாய்.....
எந்தன் தோளில் சாய்திடும் நன்விழி நீயாவாய்....
உந்தன் சிரிப்பு பார்க்கையிலே ரசிக்கும் துமி நானாவேன்.....
பூவினியான ஆரலியே....❤️❤️

-























-



வெண்ணெய் உண்ட மாதவா...
நானும் கையில் குழல் ஏந்தவா..
எந்தன் ராதையை தேடவா...
என் தேடலுக்கு நீயும் உதவ வா..
சீக்கிரம் நீயும் ஓடி வா..
சேர்ந்து செய்வோம் லீலைகள் பல..
ஓடோடி வா...

-


15 MAY AT 13:45

சமாதானத்திற்கு
மொழி கேட்டேன்

என்னையும் மெத்தையையும்
கலைத்து சென்று விட்டான்

கள்வன்

-