முகம் பார்க்க கூட
பயன்படாத உடைந்து
சிதறிய கண்ணாடி
துண்டுகளாக இருந்த
எங்களை வைரம்
ஆக்கியது என்னவோ
அம்மாவின் அந்த
வைராக்கியம் தான்..!!-
கண்மூடி அமர்ந்து இருந்தால்
மனக் கவலைகள் குறைந்து
விடும் கனவுலகில் கால் பதித்தால்
மனக்குமுறல்கள் அடங்கிவிடும்
கவலைகளை விடுத்து காற்றுடன்
நேரத்தை செலுத்து தனிமையை
துரத்து உன் புத்தகத்தில் கசந்த
பக்கத்தை திருத்து இதுவே
எனது கருத்து..!!!-
என் நினைவில் அவள்
ஒரு நாழிகை கூட
வந்ததில்லை அவளை
எங்கேயும் பார்த்த ஞாபகம்
கூட எனக்கு இல்லை
அவள் எனக்காகத்தான்
பிறந்திருப்பாளோ என்று
கூட நான் அறிந்ததில்லை
அவளைக் கண்ட நாள்
அவள் எனக்கானவள் எனக்கு
மட்டுமே உரித்தானவள் என்ற
உரிமை எங்கிருந்து ஒட்டிக்
கொண்டது என்பது மட்டும்
எனக்கு புரியவில்லை..!!!-
ஊரே உறங்கும் நேரத்தில்
என்னுள் இருக்கும் கவிஞன்
மட்டும் ஏனோ விழித்துக்
கொள்கிறான் அவன் ரசித்த
நிகழ்வை எல்லாம் கிறுக்க
சொல்கிறான் அதை மனதார
ரசிக்க சொல்கிறான் ஏதோ
ஒருவகையில் இருகிய மனதை
உருக செய்கிறான்...!!!-
ஆயிரம் கவித்துவமான
சொற்களை கற்று தேர்ந்து
இருப்பினும் "அம்மா" என்ற
ஒற்றைச் சொல்லுக்கு நிகரான
ஓர் அழகியலை என்னால்
கண்டெடுக்க முடியவில்லை..!!
-
நீண்ட போராட்டத்திற்கு பின்
உறங்க முற்படுகையில்...
மின்விசிறியில் ஒரு சிறு சத்தம்
என் மனம் அதனுடன் ஏதோ
பேச முயல்வதாக உணர்கிறேன்
அது நேற்றைய நிகழ்வா இல்லை
நாளைய கனவை பற்றியதா
சற்றும் விளங்கவில்லை இருந்தும்
ஏதோ பேச நினைகிறது பல நாள்
பழகிய மனிதர்களை விட
மறுப்பேதும் சொல்லாமல் செவி
சாய்க்கும் மின்விசிறியிடம்...!!-
காந்த கண்களால் கவர்ந்து விட்டாய்...
விழிசிறையில் என்னை அடைத்து விட்டாய்..
அன்பின் இலக்கணம் நீயானால்... !!
ஆயுள் முழுக்க சிறை படுவேன்..!!!
உன் அன்பில் முழ்கி நான் கிடப்பேன்...!!
நீ ஆள நினைப்பது உலகானால்..!!
ஆயுதம் ஏந்தி போர் செல்வேன்...!!
கூரிய வாளினை கைதொடுத்து...
வெற்றியை நோக்கி ஆர்ப்பரித்து..
பல தேசங்கள் சென்று போர் தொடுத்து ...
இவ்வுலகை உனக்கு பரிசளிப்பேன்...!!
உன் புன்னகை கண்டு நான் ரசிப்பேன்..!-
இன்னொரு வாய்ப்பு
மட்டும் கிடைத்தால்
இழந்த என்னை
மீட்டெடுத்து விடுவேன்...
-
சொற்களை ஒன்றினைத்து
மௌனமாக சொல்லிப்
பார்த்தேன் என்னுள் உலகின்
ஆக சிறந்த கவிதை போல்
இருந்தது உனது பெயர்...!!!
-
வாழ்க்கையில்
பல கனவுகளை
கடந்து செல்கிறோம்
சில கனவுகளை
மட்டும் சுமந்து
செல்கிறோம்
வாழ் நாள் முழுதும்...-