Jaya Prabha  
239 Followers · 133 Following

அழகிய கற்பனை கிறுக்கல்கள் ✍️
Joined 9 October 2020


அழகிய கற்பனை கிறுக்கல்கள் ✍️
Joined 9 October 2020
28 JUL AT 19:27

சிறுதுளி மனத்தேடலில்
பிழைத்து விடவில்லையோ

தேடல் எதுவிலும்
பிழையாகிக் கூட
கடக்க வில்லையோ

பார்வைப் பிழை
கண்ட போதும் காணாத போனதில்
கணம் பொழுதும் ஆடிச் சிதறலில்!!

-


28 JUL AT 19:14

மௌனத்தின் கரை
இன்றும் கூட உடையலாம்

தளும்பித் துள்ளி கிடக்குது
நேரம் எதுவென அறியாத நிலையில்

நிமிர்ந்து நோக்கிடாதே
நிலைதடுமாறி பொங்கி விடலாம்!!

-


26 JUL AT 12:32

வழியே போகும்
இளஞ்சோடி யொன்று
இவள் விழிகளில்
நிறைந்தது..

-


26 JUL AT 12:06

அலையாடும் கூந்தலை
உலர்த்தும் மேகத்தாரகை

பாதம் தழுவும் பேருருவம்
தாங்கிய மலையுச்சி!!

-


26 JUL AT 11:40

நிழல் தூரிகை
தீண்டும் வண்ணம்

அலையும் திவலைகளில்
அழியாத சித்திரம்

தாழ்திறவா இதழில்
தணிந்து கிடக்கும்
சின்னஞ்சிரிப்பு காண்!!

-


21 JUL AT 21:58

தூரத்து வெளிச்சம்
துவங்கிடும் வேளை..

வரிகளின் நிழலில்
ஒதுங்கி நிற்கும்
சின்னஞ்சிறு ஒளி!!

-


21 JUL AT 21:54

நினைவுகளின் சாரலில்
இன்றும் ஈரம் குறையாமல்..

-


21 JUL AT 13:46

தேனென்பர்
தேறலென்பர்
இவை ஊட்டாதது
இவள் பார்வையில்!!

-


19 JUL AT 16:54

கணம் தோறும்
கனம் கூடிப் போகிறது..

இரைதேடிப் போன பறவையின்
இணை போன்று
அறியாத நிலைகொண்டு
நிலைகுலைந்த பார்வையில்
இமை கனத்த இருவிழி!!

-


15 JUL AT 12:39

ஜன்னலோர இருக்கையின்
அழகை இரசிக்க மறந்து
கைப்பேசி செயலியுடன்
உணர்வற்ற பயணத்தில்
சிலரின் பொழுது

நகரும் பொழுதோடு
ஜன்னலோர இருக்கைக்கு
ஏங்கிய படி சிலரின் கண்கள்





-


Fetching Jaya Prabha Quotes