-
அரசியல் ஆத்திசூடி... (நல்ல அரசியல் வாதிகளுக்காக)
அரசியல் செய விரும்பு...
ஆளுவது அறிவு...
இரக்கத்தைக் கடை பிடி...
ஈகை செய்...
உள்ளதைப் பேசு...
ஊழலை விரட்டு...
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்...
ஏற்பது கடமை...
ஐயமின்றிச் செயல்படு...
ஒழுங்கை நிலை நாட்டு...
ஓயாது உழைத்திடு...
ஒளவையை மதித்திடு...
அஃதில்லையேல் வராதே...-
திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...-
சிற்பி நீ...
உளி நான்...
சிற்பமாய் காதல்...
சிப்பி நீ...
முத்து நான்...
கடலாய் காதல்...
வார்த்தை நீ...
வாக்கியம் நான்...
காவியமாக காதல்...
வேர் நீ...
மரம் நான்...
கிளைகளாகக் காதல்...-
கேட்கும் வயதா இது!!
வயதுக்கும் காதலுக்கும்
முடிச்சுபோடும் இந்த உலகம்
அன்பை பகிரும் விதத்தை கற்று
கொடுப்பதில்லை. அதை கேட்கும்
நிலையில் யாவரும் இல்லை
-
இவளை நேசித்து விடாதீர்கள்
(Translation "Don't fall in love" by Martha Rivera Garrido)-