மாநிலம் நாடு கண்டம்
தாண்டி பால் வீதியில்
உலா வருகிறேன்
கவிக்கோ கவியாய்
உன் சொற்கள் தீண்ட..!-
வேலி
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
- கவிக்கோ அப்துல் ரகுமான்
-
வரப்புகளிலும் முளைக்கிறது புல்
வெயிலிலும் மலர்கிறது பூ
ஆனால்
நம் இதழ்களில் மட்டும் காயங்கள்!!!
- கவிக்கோ அப்துல்ரகுமான்-
ஒரு அரசியல்வாதியாக கலைஞரை எனக்கு பிடிக்காது.ஆனால் ஒரு படைப்பாளியாக இலக்கியவாதியாக கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும்.பாரதிதாசனுக்கு பிறகு எழுத்துக்களில் புரட்சி தீ மூட்டியவர்.தமிழ் சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர்,அவரே வியந்து பாராட்டிய கவிஞர்,ஒரு விழாவில் எனக்கு அப்துல் ராகுமானை கொடுங்கள் என்று கலைஞரையே யாசகம் கேட்க வைத்த எழுத்தாளர்,வின்மீன்கள் விற்கும் சந்தையில் நீ கவுச்சிக் கடை மீன்களை விற்றுக்கொண்டிருக்கிறாய் என்று திரையுலகில் பாடல் எழுத்துவதற்காய் கண்ணதாசனை கடுமையாக விமர்சித்தவர் அய்யா கவிக்கோ அப்துல் ராகுமானை குறித்து காண்போம்.
நேசமுடன்
-காஞ்சி வழிப்போக்கன்-
என்னிடமிருந்து புறப்பட்டு
நெடுந்தூரம் வந்துவிட்டேன்.
எங்கே போவது என்றும் தெரியவில்லை.
திரும்பிப் போகவும்
மனமில்லை.
-கவிக்கோ-