I will ask…
Why you always leave me
at the time of dark!!!
-
வரப்புகளிலும் முளைக்கிறது புல்
வெயிலிலும் மலர்கிறது பூ
ஆனால்
நம் இதழ்களில் மட்டும் காயங்கள்!!!
- கவிக்கோ அப்துல்ரகுமான்-
ஏனோ தெரியவில்லை
உனது கரங்களை பற்றிக்கொண்டு என்னை நான் காத்துகொள்ள வேண்டும்...
ஏனோ தெரியவில்லை
உனது தோள்களில் சாய்ந்து என்னை நான் தேற்றி கொள்ள
வேண்டும்...
ஏனோ தெரியவில்லை
உனது உட்சி முகர்ந்து என்னை நான் ஆசுவாச படுத்தி கொள்ள
வேண்டும்...
ஏனோ தெரியவில்லை
உன் மடியிலே வீழ்ந்து என்னை நான் உறங்க செய்ய
வேண்டும்...
ஏனோ தெரியவில்லை
உன்னை இறுக அணைத்து என் கண்ணீரால் உன் இதயத்தை நனைக்க வேண்டும்...
-
மாபெரும்
மன போரட்டங்களையும்...
மீள இயலாத
இழப்புக்களையும்...
ஆறாத
காயங்களையும்...
தீராத
வலிகளையும்...
-
புத்தகம்
என்றும் என் இனிய
நண்பன்...
புத்தகம்
எனது ஈடு இணையில்லா
செல்வம்...
புத்தகம்
எனது விதியை மாற்றும்
மதி- சக்தி ...
புத்தகம்
எனது புரியாத புதிர்களுக்கான
புதிய விடை...
புத்தகம்
எனது வாழ்கையின் வலிகளுக்கான
வழிகாட்டி...
உலக புத்தக தின வாழ்த்துக்கள் 📚😊
புத்தகங்களை வாசியுங்கள்
வாழ்கையில் மேன்மேலும் வளருங்கள்...
-