Thirst that,
Unquenchable
For a broken cup.
-
Murali Dharan
(நீலகண்டன்)
488 Followers · 326 Following
Joined 24 August 2019
29 NOV 2024 AT 20:52
புத்தம் புதிதாய்
ஒரு புதுக்கவிதை
புல்லின் நுனியில்
ஒரு பனித்துளி
-
28 NOV 2024 AT 22:00
பத்து நிமிடத்தில்
பத்த வச்ச கண்ணால
பட்டாசு போல சிதறுதடி
என் மனசு உன்னால-
29 OCT 2024 AT 21:46
மணல் வீடு செய்து
விளையாடும் குழந்தையை
பார்த்தது கடல்.
வீடு வரை சென்றது கடல்.
ஆழ்ந்த உறக்கத்தில்
உள்ளங்கையில் இருந்து
நழுவியது இரண்டு சிப்பிகள்.
குழந்தை நெற்றியில்
அலை அலையாய்
விளையாடும் கடல்.
-
22 OCT 2024 AT 22:26
கத்தியோடு வந்தவர்களே
வெட்டியது போதும் என்று
விட வேண்டாம்
சாணை பிடித்து வந்தாலும்
திடமாக வருக வருக
என்று வரவேற்பேன்
ஆறுதலென எதுவுமே
வேண்டாம்.
-