உலகிலேயே மிகப்பெரிய தியானம் மழை.
மழை துளி துளியாக பெய்கிறது.
நாம் அதை ஒன்று சேர்ந்த
வடிவமாக பார்க்கிறோம்.
மழை ஓசை எழுப்புவது இல்லை.
மண்தான் ஓசை எழுப்புகிறது. அப்படித்தானே மனமும்
-எஸ்.ரா-
Violin & flute... read more
தோற்றுத்திரும்புகையில்
எல்லாம் உன்னால்தானென
பழிசுமத்தி ஆறுதல்
அடையவேனும்
யாரேனும் இருந்தால் நலமெனும்
சிறு மனக்குறையைத்தவிர
யாருமில்லாதிருப்பதில்
யாதொன்றும்
குறைவில்லை.
-ரிஸ்கா முக்தார்-
நான் முதல்முறை உன் கரம் தொட முயன்றபோது,
சரியாக அந்த வினாடி கரம் விளக்கித் தள்ளிப்போனாய்..
அப்போது புரிந்து கொண்டேன்
எப்போது தீண்டுவேன் என நீ காத்திருந்ததை..-
விட்டுப் போகும்போது
ஓசையில்லாமல்
கதவைச் சாத்திக்கொண்டு போவதும்
ஒரு கலைதான்.
~ மனுஷ்-
எல்லாம் இருக்கவன் எதுவும் இல்லாதவன என்ன வேனும்னாலும் செய்யலாம்னு இருக்கறத மாத்தனும்..
-
எங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் பெரிசா சாதிக்க வேண்டாம்..
உங்கள் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி உங்க மத்தியில் வாழ்தலே நாங்கள் அடுத்த தலைமுறை போராளிகளுக்கு கொடுக்கிற நம்பிக்கை.
-படித்தது
-
யார் குரலையும்
கேட்க விரும்பாதது போல்
கூச்சலாக பெய்கிறது
மழை!
~ பேயோன்-
எவ்வளவு
மனம் முறிந்துபோயிருக்கிறோம் என்றால்,
எவ்வளவு
தனிமைபட்டுப் போயிருக்கிறோம் என்றால்,
ஒப்புக்கு யாராவது
'உன்னைத்தான்
நினைத்துக்கொண்டிருந்தேன்' என
ஒரு வார்த்தை சும்மா சொன்னால்கூட
நெகிழ்ச்சியில்
கண்ணீர் வந்து விடுகிறது.
~ மனுஷ்-
நாளின் ஒவ்வொரு
சிறு நகர்வையும்
யாரிடமும் பகிர்ந்து பழகாதீர்கள்.
வாழ்வு நிலையற்றது...!!!
-படித்தது-