QUOTES ON #கல்யாண்ஜி

#கல்யாண்ஜி quotes

Trending | Latest

யார் கையாகவோ
நினைத்துக்கொண்டு
யாருடைய கையையாவது
பிடித்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது...

_வண்ணதாசன்

நடக்க கற்று தரும்
உங்கள் கவிதைகளைத்தான்
நான் இப்பொழுது
இறுக பற்றிக்
கொண்டிருக்கிறேன்...!

-


22 AUG 2019 AT 9:10

வறுமையையும் இயலாமையையும் ஒன்றாய் பேசும் #வண்ணதாசன் என்ற பெயரில் கதைகள் எழுதும் நாவலாசிரியரும் #கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் கவிஞரும் எழுதிய அற்புதமான வரிகள்.

சாகித்ய அகாடமி விருது வாங்கிய அந்த மகா படைப்பாளிக்கு வழிப்போக்கனின் #இனிய_பிறந்தநாள்_நல்_வாழ்த்துக்கள்.

-


17 NOV 2022 AT 16:09

நீ வருவதற்காக

காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்

-



இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்.
உச்ச மகிழ்வுக்கும
உச்ச வலிக்கு
அனுபவிப்பனிடம்
அடைமொழி இல்
எம் வலி ஆகா
உம் வலி

**கல்யாண்ஜி**

-



மரமல்லி மரத்தடி
தெரு நாய்க்கு மைதானம்.
வைகறை வெளிச்சத்தை ஒரு கடி,
உடைந்த ப்ளாஸ்டிக் கோப்பையை
ஒரு பொய்க் கவ்வல்.
முழு உலகையும் தரையில் உருட்டி
நான்கு கால் உயர்த்தும்
ஆனந்தப் புரளல்.
என் அற்பத்தின் கடைவாயில்
பிச்சை புகுந்து பெற்ற
ஒரு துணுக்கு ஆனந்தம் கசிய
கந்தல் சூரியன் பார்த்து
விடாது குரைத்தபடி நான்.

- வண்ணதாசன்

-


30 NOV 2021 AT 17:01

தேர்ந்தெடுத்துக்கொள்ள
முடியாத வாழ்வு
வரித்துக்கொள்ள
முடியாத மனிதர்கள்
இவற்றுக்கிடையில்
ஒரு இறகு வந்து
என் முற்றத்தில் விழுகிறது.

-கல்யாண்ஜி

-