சகித்துக்கொள்வதும்..
சகித்துக்கொல்வதும்..
காதலேனப்படுகிறது...!!!-
நினைவுத் தூரிகை நீ...!
எதை நினைத்தாலும்..
நீயே வண்ணமாகிறாய்...!!
-
நினைவுத் தூரிகை நீ...!
எதை நினைத்தாலும்..
நீயே வண்ணமாகிறாய்...!!
-
மொட்டெல்லாம் மலர்வதில்லை..
நீ மட்டும் மலர்ந்துவிட்டாய்...
என் வாசனையாய்..!!!
/நீயென் நறுமுகை...!!//-
எங்கெங்கும்..
நிறைந்து கிடக்கிறாய்..
அங்கங்கே.. சற்று
இறைந்தும் கிடக்கிறாய்..
நிறை...குறை..நீ...!!-
பாதையெங்கும்...
உந்தன் நினைவுத்தடங்கள்...!
க(ந)டந்து போகிறேன்...
ந(க)டக்க முடியாமல்..!!
-
ஒவ்வொரு முறையும்..
மன்னிக்கும்போது..
காதல் சற்றே...
மரணிக்கத்தான் செய்கிறது...!-
காதல் பிரார்த்தனைகளில்..
அதிகப்பட்ச வேண்டுதல்...
நீதான்...
நீயேதான்....!!!
//நீயேத்துணை...!!//-
அருகருகே..
அமர்ந்து..
கதை பேசுவதை விட...
அருகாமையை....
உணர்த்தும்...
உனது அலைபேசியின்
அழைப்போசை...
ஆகச்சிறந்தது...!!-
எனக்காக இதை கூட செய்ய மாட்டாயா என்பதிலிருந்து..
எனக்காக அப்படி என்ன செய்து விட்டாய் என்பது வரையில் தான்
அந்த காதல் வாழ்கிறது...!!-