தாமரைப்பாக்கத்தில்
தாமரை மலர்களிடையே
வெண்தாமரையாய்
நீங்கள் உறங்க
உங்கள்
அன்பான பார்வையும்
கனிவான புன்னகையும்
இனிய குரலும்
எங்களுக்குள்
விழித்திருக்கும்...-
26 SEP 2020 AT 12:50
19 JUN 2021 AT 16:28
அன்பு!
உன் அன்புக்குரியவர்கள் பிரிந்தால் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் அவர்களின் அன்பு ஒருபோதும் பிரியாது, உண்மையாக இருந்தால்!....-
1 OCT 2020 AT 9:02
என் கனவுகள் மெய்ப்பட - நீ
உன் கனவுகளை இழந்தாய் !!
என் மதியை திறக்க - நீ
உன் மதியை இழந்தாய் !!
என் கண்கள் உலகைக் காண - நீ
உன் கண்களையும் கொடுத்தாய் !!
பல் இல்லாத நிலையில் என்னை தேற்றினாய்!!
உன் பல்லிழந்த வயதில் எப்படி நான் தொழுவேனோ - நான் அறியேன் !!-
2 MAR AT 19:32
செங்குருதியை கொப்பளித்து தள்ளும்
அவள் இதயத்தின் ஏதோ ஒரு துடிப்பு,
எப்பொழுதேனும் ஒரு முறையாவது
என்னை நினைத்து துடித்து விடாதா?!
என்பது மட்டுமே என் வாழ்நாள் ஏக்கம்...😕-