TAMILSELVAN MUTHURAMAN   (𝐌𝐓-𝟒𝟓🦋✨)
12 Followers · 45 Following

read more
Joined 20 May 2022


read more
Joined 20 May 2022

விருப்பமானவை பல இருந்தாலும்
நெருக்கமானவர்களைத் தான்
தொலைத்துவிடுகிறேனே!

-



இரவைத் தின்னும் அந்த
இரக்கமற்ற உறக்கத்தை
இமை மூடி யாசிக்கிறேன்
அது வருவதே இல்லை
மாறாக அவளே வருகிறாள்
மனதின் மாய பிம்பங்களாக

-



தேநீர் மணமாய்
தித்திப்பூட்டுகிறது
அதிகாலையில்
அவள் அனுப்பும்
குட் மார்னிங்🌞

-



ஒன்றா? இரண்டா?
உள்ளம் தீண்டும்
உணர்வுகளை
ஒவ்வொன்றாய்
எண்ணுவதற்குள்
கூடி விடுகிறதே

-


25 JUL AT 22:35

முட்களால் கட்டப்பட்ட
காக்கையின் கூடு
குத்தாமல் ஆதரிக்கிறது
குயிலின் குஞ்சுகளை

-


25 JUL AT 22:28

சொல்லாத வலிகளை
சுமந்து நிற்கிறது
ஊமையின் விழிகள்
கண் பேசும் வார்த்தைகளை
புரிந்துகொள்ள யார் வருவாரோ?

-


25 JUL AT 17:11

இதயக் கோவிலில்
நித்தமும் ஓர் மணியோசை
தொடர்ந்து ஒலிக்கிறது
தொடரமல் போன காதலால்

-


24 JUL AT 22:15

நீ கிளை, நான் இலை
நான் உதிர்கையில்
நீ தக்கவைப்பதும்
நீ உடைகையில்
நான் தாங்கி பிடிப்பதும்
எப்போதும் இயலாத காரியமே!
ஆனால் மண்ணில் ஈரமும்,
நம்மில் காதலும் தொடர்ந்தால்
முறிந்த உன்னில் நான் மீண்டும்
உயிர்த் துளிர்ப்பேன்

-


24 JUL AT 8:39

புரிதலைத் தேடி
புரியாமல் நகர்கிறது
புதிராய் போன வாழ்வு

-


23 JUL AT 8:44

கலைந்து செல்லவே
ஒன்று கூடுகின்றன
சில மேகக் கூட்டங்கள்

-


Fetching TAMILSELVAN MUTHURAMAN Quotes