முனைகள்
மழுங்கிய
முட்களாய்
உன் கோபம்
உரிமையின்
உச்சத்தில்!-
22 DEC 2019 AT 18:52
உன் முகவரி கொண்டு வரும்
காதல் மட்டுமல்ல
அழுகை
வெறுப்பு
விரக்தி
வலி
என எவ்வகைத்தாயினும்
அது எனக்கு
மாத்திரமே உரியது..!!-
7 OCT 2019 AT 19:44
உரிமையான
உன் கோபத்தில்
உயிரைத்தின்ற
வலியிருப்பினும்
உறுதியாகவே
இருக்கிறேன்...
நீ எனக்கு மட்டும்
என்பதில்!-
24 JAN 2020 AT 21:08
தன் மகளின்
உரிமைக்காக மாப்பிள்ளையிடம்
சண்டையிடும் அப்பாவுக்கு...!
தன் மனைவிக்கு
உரிமை கொடுக்காததை
உணராமல் போனார்...!
-அம்மா
💞க.கொ.மணிவேல்...🖋
-
18 APR 2020 AT 17:29
உரிமை உள்ள இடத்தில் மட்டுமே
அறிவுரை கூறுங்கள்
மற்றோருக்கு அறிவுரை கூறினால்
அவமானம் மட்டுமே மிஞ்சும்
-
16 FEB 2020 AT 18:08
உரிமையுள்ளவராக இருந்து விட்டு சட்டென்று உரிமையற்றவராக
மாறும் நொடியில் இருக்கிறது
ஆயிரம் வலிகள்-
6 JAN 2022 AT 12:24
உறவென்பது பகட்டுக்கல்ல
அது உணர்வுகளின் அடையாளம்
உரிமையை கோர்க்கும்
தனித்துவமான நேசக்களம்-