காட்சிகளில் அடங்கிடாத..
காதல் எனக்கு உன்னிடத்தில்..!
எவரும் அறிந்திடாத..
தேடல் எனக்கு உன்னிடத்தில்..!
கானலாகத் திரிந்த இவளின்..
மெய் பிம்பமாக மாறிவிட்டாய்..!
கனவுகளில் வாழ்ந்த இவளை..
மறு கரைக்கு அழைத்து வந்தாய்..!
என் வாழ்வின் முதன்மையே..!
நான் தேடி வந்த இனிமையே..!
என் இனிய கணிதமே..!— % &-
பூங்காற்று வீச..
கார்குழல் அசைய..!
காதோரம் கதைத்த..
அந்த ரோஜாவும் உதிர..!
தூது சென்ற மழை..
தூரலிட்டு குறுக்கிட..!
சிறகை நீட்டிப் பறந்தது..!
சிறையில் கிடந்த..
அந்த பட்டாம்பூச்சி..!-
தந்தையற்ற வீட்டில் முரண்கள்
வேறு முளைக்கலாம்
கருத்து வேறுபாடு பல எழலாம்
தனித் தனி தீவுகளாக மனதால்
பிரிந்துகூட கிடக்கலாம்
எறிகின்ற நெருப்பில்
பிறர் எண்ணெய்யைக் கூட ஊற்றலாம்
கேடுகெட்ட அனைத்து வேலையையும்
துணிந்துகூட செயலாம்
கேட்பாறற்று கதிகெட்டு இருக்கிறோம்
என்று கூட பிறர்க்கு சிந்தனை எழழாம்
பிறறை முன்வைத்து காய்களைக்கூட
அழகாய் நகர்த்தலாம்
இவையாவும் செய்வதற்குமுன்
சற்றே சிந்தித்துக் கொள்ளுங்கள்
சிறு வயதிலிருந்து
குடும்பப் பெருமையையும் வறுமையிலும்
கட்டிக் காத்த பெண்னொருத்தி
நாடித் துடிப்போடு தான் இருக்கிறாளென்று
-
உலகமே வீடாய்
அவனுக்கு..
அவனே உலகமாய்
இவளுக்கு..
அதிகபட்ச எதிர்பார்ப்பெல்லாம்
அன்பே எனினும்
அதற்காய் தவமிருக்க,
அவனோ அதை
ஏற்க மறுக்க,
எங்கோ தேடும்
இவனின்பம்
எப்படி கிடைக்கும்
இவளின்றி..!!-
இவன் தூக்கத்தின் ஆழம்
அறிந்தவள் அவள்
இவள் முத்தத்தின் தீண்டல்
அறிந்தவன் அவன்-
இருளினில் ஒளியாக..
இதயத்திற்கு இதமாக..
இனித்திடும் கனவே..!
இன்னிசையாக,
இவள் மனதில் புகுந்த நீ..
இன்று இலக்காக,
உயிர் பெற்றுவிட்டாய்..!
சாளரங்களின் வழியே..
வானம் பார்த்த இவளுள்..!
வான்தொடும் ஆசையை..
விதைத்துவிட்டாய்..!
மாற்றம் பெற்றிடாத..
இவளும் மாறிவிட்டாள்..!
தன் கனவுகளுக்காக..
வாழவும் தொடங்கிவிட்டாள்..!-
இவளின் கனவுகளுக்கு..
நீங்கள் மதிப்பு தர,
இயலாவிடினும் கூட..!
வேலியிடாமல் இருந்தால்..
அது ஒன்றே போதும்..!
உயிர்ப்பித்து விடுவாள்..!
அதி உத்வேகத்தோடு..!-
மென்மை என்று..
நீங்கள் இவளை..!
சிறைப்படுத்த வேண்டாம்..!
அழகு என்று..
நீங்கள் இவளை..!
உவமிக்க வேண்டாம்..!
நீங்கள் நினைப்பதை விட..
இவள் வன்மையாகவே..!
இருக்கிறாள்..!
எவரின் கருணையோ..
எவரின் துணையோ..
இவளுக்குத் தேவையில்லை..!-