-
நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தாய்..
எட்டுத்திக்கும் தேடியும்
கிடைக்காத பொக்கிஷமானாய்..
அரவணைத்து செல்வதில் அன்னையானாய்..
அறிவுரை வழங்குவதில் தந்தையானாய்..
ஆறுதல் கூறுவதில் உடன்பிறப்பானாய்..
கற்றுத் தருவதில் ஆசானானாய்..
குறும்பு செய்வதில் குழந்தையானாய்..
அன்பு காட்டுவதில் வள்ளலானாய்...
பிறர் எள்ளி நகைக்கையில்
தட்டிக்கேட்கும் என் உணர்வுமானாய்..
இறுதியில் என் கவிதையின் கருவுமானாய்...
இன்றோ இருதுருவங்களாய் நாம்-
காதலன்
எங்கள் வீட்டுக் கூடத்தில்
தேநீர்க்கோப்பை அல்லது
அப்பாவுடன் உரையாடிக் கொண்டிருப்பான்...
நண்பன்
எங்கள் வீட்டு அடுப்படியில்
அம்மாவுக்கு ஒத்தாசை செய்துகொண்டே
அம்மாவுடன் உரையாடிக் கொண்டிருப்பான்...
-
அழகிய தருணங்களில் மட்டுமல்ல...
அழுத தருணங்களிலும்
அன்பின் அகராதியாக....
நானிருக்கிறேன் என்ற
அழுத்தத்தில்...அவன்!
இன்றும் கூட என்னில்
உறவாடியபடி....!
நட்பின் நகர்வலத்தில் நான்!-
என்னைப்படித்தவனின்
பார்வையில்
உற்றதோழியாய் நான்!
எழுத்துப்பிழையாக காதல் எங்களுக்குள்
இல்லாதிருப்பதில்!-
எங்கோ பெய்யும் மழையின்
வாடைக் காற்றில்
குளிர் காயும்
குட்டி இதயத்தின்
கவிச் சாரல் 👇👇
-
உரிமை இல்லாத இடத்தில் விளங்க முடியா உணர்வில் உளலும் பேதை ஒருத்தியின் பரிதவிப்பாய்...
காதலர்கள் இல்லாத காதல் கவிதை👇👇👇 ( #1000th quote #)
-