அன்பை ஊட்டி
வளர்க்கும் அன்னை
அனுபவத்தை சொல்லி
வளர்க்கும் தந்தை
அறிவை போதித்து
வளர்க்கும் ஆசான்
மாதா பிதா குருவே
வாழ்வின்
கண் கண்ட தெய்வங்கள் 🙏-
அறிந்ததை அறிந்தவாறு
பிறர் அறிய / தெளிய
கற்றுத்தரும் ஆசிரியர்கள்
வரம் தர காத்திருக்கும்
தேவதைகள்...-
நடத்தும் பாடத்தில்
மட்டுமல்ல
பழகும் விதத்திலும்
பல பாடங்களை
கற்றுத் தருபவர்...-
கரும்பலகையில் காலம் ஓடி
சுண்ணாம்பு துகளில் சுவாசம் தீட்டி
கற்று கொடுத்த
என்னுள் இன்னும் இருக்கிறது வலி
வழி காட்டிய
மனிதனுக்கு
வலி கொடுத்த
சமூகம்
கத்தி கத்தி கற்பித்ததால்
கத்தி குத்தும் காண வேண்டி இருக்கும்
ஏணி படிகளாக இருப்பதாலேயோ என்னவோ
ஏறி மிதித்து செல்கின்றனர்
ஆண்டிற்கு ஒருமுறை வரும் ஆசிரியர் தினம்
அன்று மட்டும் வாழ்த்துக்கள் வந்து குவியும்
அறப்பணி உன்னை அர்ப்பணி என்பார்கள் சமூக சிற்பி என்பார்கள்
இருந்தாலும் இறந்தாலும்
ஆசிரியராக இருப்போம்
கற்பித்தலை கடமையோடு செய்ய
கல்விக் கடவுளாய் எப்பொழுதும்
-
கற்றுத்தந்த
கல்விச் சாலைகள்
கட்டிடமாய்
கற்றுக்கொள்ளும்
கவிதை சாலையோ
கவிச்சோலையாய்...-
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
இங்கு பிரவேசிக்கும் ஒவ்வொரு கவியாளரும் ஆசிரியரே
உங்கள் வரிகளில் ஆயிரம் அர்த்தங்களால் மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை கற்றுத் தந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்...-
உன் மீதும்
உறவுகள் மீதும்
அன்போடு இருக்க
கற்றுக் கொடுக்கும்
முதல் ஆசிரியை
அன்னையே!-
வாழ்வில் நீ சந்திக்கும்
ஒவ்வொரு நபரும்
ஒவ்வொரு விஷயமும்
உனக்கு ஆசிரியரே!
ஏதாவது ஒரு பாடத்தை
உனக்கு கற்றுக் கொடுத்தே
உன்னை கடந்துச் செல்லும்!-
தமிழில் இலக்கணம் கண்டதில்லை,
ஆங்கிலத்தில் இலக்கியம் கண்டதில்லை,
கணிதத்தில் எண்ணிக்கைகள் கண்டதில்லை,
அறிவியலில் இயற்பியல் வேதியியல் உயிரியல் வகைப்பாடு கண்டதில்லை,
வரலாற்றில் உலக வரைபடம் கண்டதில்லை,
இவை அனைத்தையும் கண்டேன்
கரும்பலகையிலும் என் ஆசிரிய பேராசிரியரின் வாய்மொழி வாயிலாகவும்..!-