தன்னையும் மீறி விடுவார்களோஎன்கிற
தப்பான எண்ணத்தின் அடிப்படையில்
தன் நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளும்
ஒருசிலர் .....
மற்றவர்களின் திறமையைப்
பாராட்ட மனமின்றி .....
அவர்களையும் அவர்களது செயலையும்
மட்டம் தட்டவே முயல்கின்றனர் !-
எங்கும் குறை தேடி
நொட்டை பிடித்து
விமர்சனம் செய்யும்
வில்லங்கமானவர்கள்
எவராக இருந்தாலும் சரி ....
ஒருபோதும் சிந்தனை வளம்மிக்க
சிறந்த சீர்திருத்தவாதிகளாய்
இருக்க முடியாது...!-
விமர்சனங்களை
ஆழ்ந்து உள்வாங்கிட,
நீ உன் சுயத்தை
இழக்க கூடும்...-
பின்னாலிருந்து
நீ விமர்சிக்கப்பட்டால்
நினைவில் வைத்துக் கொள்
நீ முன்னால் இருக்கிறாய் என்று-
கவிதைகளை விரும்பி
பின்னூட்டம் எழுதுபவர்...
கவிதைகளை விரும்பாமல்
பின்னூட்டம் எழுதுபவர்...
கவிதையும் விரும்பாமல்
பின்னூட்டமும் எழுதாமல்
தங்கள் கவிதைகள் மூலம்
ஆழமாக விமர்சிப்பவர்..
பலவகை மனிதர்கள்....-
ஒவ்வொரு
மனங்களும்
ஒவ்வொரு
பக்கம்
போலவே
முழுதாய்
படிக்க
முயற்சி செய்
பின்பே
விமர்சனம் செய்-
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு பிம்பம் போல
ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு ரசனை போல
ஓயாமல் காத்திருக்கு
விமர்சனத்தை எதிர்ப்பார்த்து
எழுத்திற்கும் எண்ணத்திற்கும்
உரு கொடுக்கும் படைப்பாளியின்
எழுதுகோல்-