எதிர்பார்க்கவே இல்லை
அந்த கவிஞரின் புதிய வீட்டுச்
சுற்றுச்சுவர்களில் எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும் அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள் பதிக்கப்பட்டிருக்கும் என!!
#வண்ணதாசன்-
வறுமையையும் இயலாமையையும் ஒன்றாய் பேசும் #வண்ணதாசன் என்ற பெயரில் கதைகள் எழுதும் நாவலாசிரியரும் #கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் கவிஞரும் எழுதிய அற்புதமான வரிகள்.
சாகித்ய அகாடமி விருது வாங்கிய அந்த மகா படைப்பாளிக்கு வழிப்போக்கனின் #இனிய_பிறந்தநாள்_நல்_வாழ்த்துக்கள்.-
காணாமல் போகத்தான் எனக்கு பிடிக்கிறது. ஒரே இடத்தில் இருந்து அலுத்துவிட்டுப் போயிற்று. இப்படித் தொலைந்து போதிலும், தேடி நிற்பதிலுமாகக் கொஞ்ச காலம் இருந்தால் என்ன.
- கல்யாண்ஜி-
அதிக பட்சம் இந்த வாழ்க்கைக்கும்
மனிதனுக்கும் உண்மையாக
இருக்கவே முயல்கிறேன்.
சிகரங்களை அடைகிற
உந்துதல்கள் இல்லை.
ஆனாலும் போய்க்கொண்டிருக்கத்
தோன்றுகிறது,
தனியாக அல்ல
மிகவும் நட்புணர்வும்
"அடிப்படை புரிதல்களும்"
உள்ள மனிதர்களுடன்..
_வண்ணதாசன்-
"உச்ச மகிழ்வுக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை!"
~ வண்ணதாசன்-
எதிர்பார்க்கவே இல்லை அந்த கவிஞரின் புதிய வீட்டுச் சுற்றுச்சுவர்களில் எந்தப் பறவைகளும் பூனைக்குட்டிகளும் அமர முடியாதபடி கண்ணாடிச்சில்லுகள் பதிக்கப்பட்டிருக்கும் என !!
#வண்ணதாசன்-
கடற்கரைக்கு
சிறுமிகளை பிடிக்கிறது
அவர்கள் தான்
வீடு வரை
ஒட்டிய மணலைத்
தட்டி விடுவதே
இல்லை
-வண்ணதாசன்-
" குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுங்கள். கண்டிப்பாக இருங்கள். ஆனால் வேப்பம் பழம் பொறுக்க அனுமதியுங்கள்"
-வண்ணதாசன்-
முக்கால்வாசிப் பேர்
"ஞாபகமாய்"
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்துக் கேட்கிறார்கள்
கவிதைப் புத்தகத்தில்.
இதற்குக் கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்
-வண்ணதாசன்-
மரமல்லி மரத்தடி
தெரு நாய்க்கு மைதானம்.
வைகறை வெளிச்சத்தை ஒரு கடி,
உடைந்த ப்ளாஸ்டிக் கோப்பையை
ஒரு பொய்க் கவ்வல்.
முழு உலகையும் தரையில் உருட்டி
நான்கு கால் உயர்த்தும்
ஆனந்தப் புரளல்.
என் அற்பத்தின் கடைவாயில்
பிச்சை புகுந்து பெற்ற
ஒரு துணுக்கு ஆனந்தம் கசிய
கந்தல் சூரியன் பார்த்து
விடாது குரைத்தபடி நான்.
- வண்ணதாசன்-