You can't really hold on to someone. 'Cause the tighter you hold on to them, the more they want to slip away. All you can do is love them and make sure they know that you're never gonna slip away.
- The Kissing Booth-
ஆராதிக்கப்படுகிற தூரல்
சற்று அதிகமானதும்
சபிக்கப்படுகிற மழை ஆகிறது
அன்பும் கூட அப்படித்தான்!
ஒரு தொலைவில் இரசித்தபடி
நகர்ந்துவிட வேண்டும்
அனைத்தையும்
தனதாக்கிக்கொள்ள நினைக்கும்
மனதின் அறியாமைக்கு
அந்த இடைவெளிதான்
போதிமரம்..!
~சுதர்சன் பாரதி-
மனித உறவுகளில் நமக்கான இடமென்பது குறித்த அச்சமும் அடையாளச் சிக்கலாகவே பார்க்கப்பட வேண்டிய ஒன்று தானே
-
~
பல
இல்லைகள் காரணமாகவே
அதிகமாக தனிமைப்பட்டு
போகிறேன்..
ஊடு பயிராக
கூட இந்த வாழ்வில்
இடமில்லாமல், அதன்
ஆற்றாமையை இயலாமையை
போக்கிக்கொள்ள வாழ்க்கையோடு விளையாடுகிறேன், எதை எதையோ
தேடி தேடி பார்க்கின்றேன்..
-
இந்த வாழ்வு சூன்யமாகிவிட்டது குறித்து அவ்வப்போது அயர்ச்சி பெருகும் நாட்களில் மனதினுள் எந்த சஞ்சலமும் இல்லை, கொதித்திடும் இரவுகளில் உன் நினைவுகளில் குளிர்காயும் பொழுது.
-
If I conquered all my demons, there wouldn’t be much left of me.
- Atticus, The Truth About Magic
-
நமக்கும்
தூக்கத்திற்குமான
பிளவினை,
சுருக்கச்செய்யும்
காரணிகளை
பொறுத்தது.
-
எல்லை அறியா காற்றைப்போல
பெயரற்ற கடல் அலையைப்போல
எதற்கும் அடங்காத பெரு வெள்ளம் போல
யாருக்கும் சொந்தமில்லாத மலையைப் போல, என்னுடன் இருந்துவிடு போதும்..
-