சிறு தீப்பொறி
அணைக்க தவறியதால்
விரவி பரவி
கிழித்தது
அழகான முகமூடியை...-
இது முகமூடி அணிந்த
உலகம் என்பது தெரியும் ...
ஆனால் எது முகமூடி என்று
தான் தெரியவில்லை...!-
முகமூடி உலகில்
மறைக்கப்படும்
நிர்வாண மனங்கள்
தங்கள் தங்கள்
மனசாட்சிக்கு மட்டும்
என்றுமே ஆபாசமாய்....-
நேர்த்தியான
நடிப்பின்
களைப்பில்
உறங்குகிறது
கழற்றி வைத்த
முகமூடிப்பூ-
கழற்றி மாட்டப்படும்
ஒவ்வொரு முகமூடியும்
கால அரியாசனத்தின் படிகளில்
ஏறியிறங்கி சறுக்கி சலித்து
துவம்சமாக்கி
தொங்கவிடப்படுகிறது...!!!
-
அவரவர் கற்பனைக்கேற்ப
வடிவமைத்த முகமூடிக்கு
பொருந்தாத முகங்களுக்கு
பெயர் சூட்டப்படுகிறது
போலி என்று...!-
புன்னகை முகங்களை
காணும் போதெல்லாம்...
என் அசல் புன்னகையை
அபகரித்து...
புன்னகை சிந்தும்
முகமூடியொன்றை
பரிசளித்து போன
நீ தான் நினைவுக்கு
வருகிறாய்..!-
முகமூடியை
அணிந்து
கொள்ளவா
வேண்டாமா
என
உணர்வோடு
போராட்டம்
நடத்துக்கிறது
மனம்-
புன்னகைக்கும்
முகங்களை விட...
புன்னகைக்கும்
முகமூடியை அணிந்த
முகங்களே அதிகம்...!-