QUOTES ON #பொக்கிசம்

#பொக்கிசம் quotes

Trending | Latest

தின்று முடித்த

மிட்டாய்த் தாள் !

மூடியில்லாமல் முனை

உடைந்த பேனா !

தேர்வு முடிந்ததும் மைத்

தெளிக்கப்பட்ட சட்டை !

குழுவாய் எடுத்துக்

கொண்ட புகைப்படம் !


தூசி தட்டப்படாத இரும்பு

பெட்டியினுள் புதைந்தே

கிடக்கும் பொக்கிசங்கள் !!!

-


5 APR 2020 AT 1:46

தேடித் தேடி
சேகரித்த பொக்கிசம்
தேடி வராத காரணத்தால்
தேடுவதை நிறுத்த முடியுமோ?

-


4 DEC 2020 AT 22:12

அடுக்கி வைத்த
ஏடு ,
படித்து முடித்த
பொக்கிச வரிகள் /

-


5 APR 2020 AT 23:17

பொக்கிஷம்,
பொக்கிஷமாய்
பாதுகாக்கப்பட்ட வரையில்,
சேதாரம் ஏதும் ஆகாமல் இருந்தது..
உலகிற்கு வந்த பின்னோ,
மதிப்புக்கூடி
மதிப்பில்லா பொருளாகி
பொக்கிஷத்தின்
தன்மையில்லாமல் போய்விட்டது..

-


22 AUG 2020 AT 0:29

புதைந்து போன
காதலின்
பொக்கிஷமாய்
நின்‌
நினைவுகள்

-


10 NOV 2019 AT 19:47

என் மன புத்தகத்தில்
மறைத்து வைத்த
மயிலறகாய்
உன் நினைவுகள்..
அவ்வப்பொழுது
திறந்து பார்த்து
மகிழும் சிறுமியாய் நான்..
என் இதய புத்தகத்தின்
அரிய பொக்கிமாய் நீ..

-


24 JUN 2017 AT 22:48

காற்று முழுக்க காதல் பரவி...!
அதில் உன்னை மட்டும் சுவாசிக்கிறேன்...!
கண்கள் பிடித்த பொக்கிஷத்தை...!
இமைகள் மூடி காத்துவிட்டேன்..!

-